புதுவை வள்ளல் சின்னாத்தா முதலியார்

0

வள்ளல் சின்னாத்தா முதலியாரின் வரலாற்றுச் சுருக்கம் முதலியார் 



தோற்றம் : மு. தாமோதரன் முதலியார் என்னும் சின்னாத்தா புதுவை முத்தியால் பேட்டையில், 1903 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள், செங்குந்தர் கைக்கோளர் குலம் முத்துசாமி முதலியார் - அம்மணி அம்மா ஆகியோரின் திருமகனாகத் தோன்றினார். தொழில் : உரிய கல்வி பெற்றதும், வணிகத் துறையை மேற் கொண்டார். வாணிகத்திற்காக மலேசியா, சிங்கப்பூர் பிலிப்பைன்சு முதலிய நாடுகட்குச் சென்று தங்கிவந்துள் ளார். 

குடும்பம் : 9-9-1925ஆம் நாள் தம் தமக்கையார் மகளாகிய பவுனாம்பா என்னும் அம்மையாரை மணந்து கொண் டார். இவர்கட்கு அன்னபூரணி என்னும் மகளும் சுப்பிரமணியன் என்னும் மகனும் உள்ளனர்

விடுதலை இயக்கம் : இளம் பருவம் முதற்கொண்டே அயலார் ஆட்சிக்கு எதிரான தேசீய இயக்கத்தில் - ஈடுபட்டு நாட்டு விடுதலைக் குப் பாடுபட்டார். இவர் தேசிய இயக்கத்தின் வலிமை பெற்ற தலைவராக 45 ஆண்டுகட்கும் மேலாக அருந் தொண்டு ஆற்றினார். விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்ட இவர், இயக் கத் தொண்டர் பலருக்குப் பொருள் உதவி புரிந்துவந்தார். விடுதலைப் போராட்டத்தில் இவர் முனைப்புடன் பங்கு கொண்டிருந்தபொழுது,பிரெஞ்சிந்திய அரசுக் காவலர்கள் (போலீசார்) தொண்டர்களை விலங்குத்தனமாகத் தாக்கி னர். அப்போது இவர், புதுவை எல்லைப் பகுதிக்கு அப்பால் தப்பித்துச் சென்று அங்கிருந்தபடியே போராட் டத்தை முனைப்புடன் தொடர்ந்து கொண்டிருந்தார். பின்னர், புதுச்சேரியை இந்தியாவுடன் இணைப்பதற் காகக் கீழூர் என்னும் இடத்தில் 18-10-1954 ஆம் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில், நகர மன்ற உறுப்பினராகிய இவரும் கலந்துகொண்டு வாக்களித்தார். கீழூரில் நடப்பட் டுள்ள சலவைக் கல் தூணில் இவர் பெயரும் பொறிக்கப் பெற்றுள்ளது. விடுதலை வீரர் என்ற சிறப்புப் பெயர் பெற்ற இவர், இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சராகிய பண்டித ஜவகர்லால் நேருவால் பாராட்டப் பெற்றுள்ளார். இடைக்கால விடுதலை அரசாங்கத்தில் முத்தியால் பேட்டைப் பகுதிக்குத் தலைவரா யிருந்தார். இவர் ஒரு காலத்தில் பெரியார் ஈ.வே.ரா. அவர்களின் சீர்திருத்த இயக்கத்தில் பிடிப்பு உடையவராக இருந்தார்; பொதுவுடைமை வாதியாக இருந்ததும் உண்டு. 

வள்ளன்மை: இவர் சிறந்த வள்ளலாகவும் திகழ்ந்தார். கல்வி வளர்ச்சிக்காக- குறிப்பாகப் பெண் முன்னேற் றத்திற்காக மிகவும் பாடுபட்டார். தமது ஊராகிய முத்தி யால் பேட்டையில் பெண்கள் பள்ளிக்காக இரண்டு கட்டி டங்களை நன்கொடையாக அளித்துள்ளார். விளையாட் டுத் திடலும் ஈந்துள்ளார். அப் பள்ளியை உயர் நிலைப் பள்ளியாக்கப் புதுவை அரசுக் கல்வித் துறையின் ஒப்புதல் பெறுவதற்காகக் கல்வி இயக்குநரிடம் சென்று முறையிட்டார். முத்தியால் பேட்டையில் பெண்கள் உயர் நிலைப்பள்ளி இல்லை யெனில், அவ்வூர் ஏழைப் பெண்பிள்ளைகள் புதுவை நக ருக்கு வண்டியில் சென்று படித்து வரும் வாய்ப்பு இல்லா மல், படிப்பைத் தொடக்கக் கல்வியோடு நிறுத்திவிடுவர் என்பதைச் சுட்டிக் கூறி ஒப்புதல் வேண்டினார். (அப் போது யானும் - சுந்தரசண்முகன்-உடனிருந்தேன்). பள்ளி உயர் நிலைப் பள்ளியாக ஒப்புதல் பெற்றுச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது ; ' சின்னாத்தா பெண்கள் உயர் நிலைப் பள்ளி' என்னும் பெயர் வழங்கப்பெற்றுள்ளது. 

மேல்நிலைப் பள்ளி: பின்னர், உயர் நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளி யாக (fligher Secondary School) உயர்த்த விரும்பினார் முதலியார். அதற்காக, (தம் மகனுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் ) இரண் டரை இலட்சம் உரூபா 'செல்விட்டுப் புதிய கட்டிடம் வாங்கித் தந்தும் மேற்கொண்டு வேண்டிய வசதிகளைச் செய்தும், வள்ளல் என்னும் பெயருக்கு மேலும் முத்திரை யிட்டார். 

சிறார் பள்ளி: முத்தியால் பேட்டையில் இவர்களின் வள்ளன் மையால் மகளிர் மேல்நிலைப் பள்ளி நடைபெற்றுக் கொண்டிருக்கவும், குறைந்த செலவில் குழந்தைகள் படிக்கச் சிறார் பள்ளி ஒன்று தொடங்கவேண்டுமென அமைப்புக் குழுவினர் ஒரு கூட்டம் கூட்டினர். அப்போது முதலியாரை நோக்கி, இப்பள்ளிக்கு நீங்கள் என்ன உதவி செய்வீர்கள் என்று கேட்டனர். அதற்கு இவர்கள், யார் யார் என்னென்ன உதவி செய்கிறார்களோ- செய்யட்டும் யாரும் செய்யாமல் மீதியாய் விடப்பட்டவற்றையெல்லாம் நான் கவனித்துக் கொள்கிறேன் என்று கூறி வேண்டியன செய்தார்கள். திருப்பாதிரிப் புலியூரில் 1973ஆம் ஆண்டு மறைத்திரு ஞானியார் அடிகளார் பெயரால் ஒரு கல்லூரி தொடங்கு வதற்காகக் கல்லூரிக் குழுவினர் இவர்களிடம் வந்து உதவி வேண்டினர். ஓரளவு பொருள் தந்து ஒரு பகுதிக் கட்டிடம் கட்டித் தருவதாகவும் இவர்கள் ஒத்துக் கொண்டார்கள் 

தொழில் முதல்வர்: பெரிய வள்ளலாகத் திகழ்ந்த இவர்கள் பெரிய தொழில் முதல்வராகவும் விளங்கினார்கள்; வேளாண் டைமக்கு வேண்டிய கருவிகளை விற்பதன் வாயிலாகவும், அவற்றை இயக்கும் வழிமுறைகளை அறிவிப்பதன் வாயி லாகவும் வேளாண்மை வளர்ச்சிக்கு மிகவும் துணை புரிந்து வந்தார்கள். பொறிகளைப் பழுது பார்ப்பதிலும் இயக்குவதிலும் இவர்கள் வல்லவர்கள். 

கடவுள் பற்று; முதலியார் அவர்கள் கடவுள் பற்று (பக்தி) உடையவ ராகவும் விளங்கினார் கள். இந்தியாவில் உள்ள பல்வேறு தெய்வத் திருப்பதிகட்கும் பயணம் செய்து வழிபட்டு வந் துள்ளார்கள், பல கோயில்கள் கட்டுவதற்கும் பலகோயில் களில் திருப்பணி செய்வதற்கும் இவர்கள் பொருள் உதவி புரிந்துள்ளார்கள்; பலகோயில்களின் அறங்காவலராகவும் அறங்காவல் குழுத் தலைவராகவும் நற்பணியாற்றியுள் ளார்கள். பலராலும் விரும்பப்பட்டு வந்த இவர்கள், தம்மை நாடி வந்த அனைவருக்கும் பெரும்பேருதவி புரிந் 10 துள்ளார்கள்; மருத்துவமனை போன்ற சில நிறுவனங் கட்கு ஒவ்வொரு பகுதிக் கட்டிடம் கட்டித் தந்துள் ளார்கள். 

விடுதலை வீரர் புதுவை அரசு, இவர்கட்கு விடுதலை வீரர் என்ற சிறப்பளித்து 24-2-1989 ஆம் நாள் தொட்டு ஓய்வூதியம் கொடுத்துச் சிறப்பு பெற்றது. 19-4-1989ஆம் நாள் கால மான இவர் கட்கு உரிய ஓய்வூதியம் 55 நாட்களுக்கேயாம். பலர்க்கு வாரி வாரி வழங்கிய கையால் வேறோரிடத்தி லிருந்து ஒன்றும் பெறக் கூடாது என்பதற்காக இவர்கள் விரைவில் இறைவனடி சேர்ந்தார்கள் போலும்! இந்த ஓய் வூதியத்தைப் பள்ளிக்குத் திருப்பிவிடவே இருந்தார்கள் அதற்குள் இறுதி எய்தி விட்டார்கள். 

தன்னலக்காரர்: முதலியார் அவர்கள் பெரிய தன்னலக்காரராகச் செயல்பட்டுள்ளார்கள். அதாவது, பிறருக்கு உதவிகள் புரிந்துள்ளதின் மூலம் தமக்கு உதவி புரிந்து கொண்டுள் ளார்கள். அதாவது, தம்முடைய பேரும் புகழும் உலகம் உள்ளளவும் நின்று நிலைக்கச் செய்துகொண்டுள்ளார்கள். நாட்டிற்கு-உலகிற்கு இத்தகைய தன்னலக்காரர்கள் மிக வும் தேவையல்லவா?

Post a Comment

0Comments
Post a Comment (0)