ஒட்டக்கூத்தர் முதலியார்

0

 


செங்குந்தர் கைக்கோள முதலியார்            
⚜️குலத் தோன்றல்⚜️
புகழ்மிக்க சோழ அமைச்சரவை தலைவர் மற்றும் அவைப்புலவர்
ஒட்டக்கூத்தர் முதலியார்


ஒட்டக்கூத்தர் என்பவர் 11-12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் 3 சோழ மன்னர்களின் அமைச்சராகவும், அவைப் புலவராகவும் இருந்தவர். 
பிறப்பு:
இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் மலரி என்னும் ஊரில் (இன்றைய திருவரம்பூரில்) நவவீரர் வம்சமான செங்குந்தர் கைக்கோளர் முதலியார் மரபில்  பிறந்தார். திருநாவுக்கரசர் பாடிய திருவெறும்பியூர் என்பதுவும் இவ்வூரே.

வாழ்க்கை
ஒட்டக்கூத்தர் முதல் குலோத்துங்க சோழனின் மகன் விக்கிரம சோழனின் (கி.பி.1120 - 1136) அவைக்களப்புலவராக திகழ்ந்தார். விக்கிரம சோழனின் மகன் 2-ம் குலோத்துங்க சோழனுக்கும் (கி.பி. 1136 - 1150), அவரின் மகன் 2-ம் ராஜராஜனுக்கும் (கி.பி.1150 - 1163) அவைக்களப்புலவராகவும், தமிழ் ஆசிரியராகவும் திகழ்ந்தார் ஒட்டக்கூத்தர். மூன்று சோழ மன்னர்களுக்கு தொடர்ந்து அவைக்களப் புலவராக திகழ்ந்த பெருமை ஒட்டக்கூத்தரையே சாரும்.
இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” என்பது வாய்மொழி வழக்கு.
நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர் கம்பரின் பிறந்த-நாளையும், மறைந்த நாளையும் நினைவுகூர்ந்து இவர் பாடியுள்ள இவரது பாடல்கள் கம்பர் இவரது காலத்துக்கு முந்தியவர் என்னும் வரலாற்று உண்மையை வெளிப்படுத்துகின்றன. 
காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த காங்கேயன் என்பவன் இவரைப் பேணிய வள்ளல். 
குலோத்துங்கன் போரைச் சிறப்பித்துப் பாடிய இவரது பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. 
இவர் இயற்றிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும்.
பூந்தோட்டம் ஊரில் சரஸ்வதி கோயிலை ஒட்டக்கூத்தர் கட்டியதாகவும், அதனால் பூந்தோட்டம் அவரது பெயராலேயே கூத்தனூர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

பெயர்ப் பொருள்
கூத்தர் முதலியார் என்பதுதான் இவரது இயற்பெயர். இவர் 'ஒட்டம்' (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பட்டார்.

இயற்றிய நூல்கள்:
மூவர் உலா
தக்கயாகப் பரணி
கம்பராமாயண்த்தில் உத்தரகாண்டம்
குலேத்துங்கன் பிள்ளைத்தமிழ்
கலிங்கப்பரணி
காங்கேயன் நாலாயிரக் கோவை
எதிர் நூல்
ஈட்டியெழுபது
அரும்பைத் தொள்ளாயிரம்
எழுப்பெழுபது
கண்டன்  கோவை
கண்டன் அலங்காரம்
தில்லை உலா.

குறிப்பு:
செங்குந்த கைக்கோள முதலியார் மரபினர்கள் தங்களின் வரலாற்றை பாடல்களை இயற்றி தர ஒட்டக்கூத்தரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் ஒட்டக்கூத்தர் அவர்கள்  வரலாற்றை எழுத மறுத்தார்.
மீண்டும் மீண்டும் பலமுறை ஒட்டக்கூத்தர் இடமும் மரபினர் தங்கள் வரலாற்றை எழுதி தருமாறு வற்புறுத்தினர். பிறகு ஒட்டக்கூத்தரும் சரி எழுதித்தருகிறேன் ஆனால் இதற்கு காணிக்கையாக எனக்கு 1008 செங்குந்த கைக்கோளர் ஆண்மகனின் தலை காணிக்கையாக வேண்டும் என்றார். செங்குந்தர் கைக்கோளர் மரபினரும் சிறிதும் கவலைப்படாமல் 72 செங்குந்தர் நாட்டில் வாழும் செங்குந்தர் கைகோளர் குடும்பத்தில் உள்ள மூத்த மகனின் தலையை வெட்டி ஒட்டக்கூத்தருக்கு காணிக்கையாக தரவேண்டுமென்று செங்குந்தர் நாட்டாண்மை உத்தரவிட்டார். 1008 செங்குந்த கைக்கோளர் தலைகள் பெற்ற பின்பே ஒட்டக்கூத்தர் ஈட்டி எழுபது இன்னும் செங்குந்தர் கைக்கோள முதலியார் களின் வரலாற்றை சொல்லும் நூலை எழுதி தந்தார். அப்போது காரைக்கால் பகுதியை சேர்ந்த மரபினர்கள் தலையை அறுக்க மறுத்து விட்டதால் அவர்களை அந்த சமூகத்தை விட்டு தள்ளி வைத்தனர் இன்று அவர்களை தலை கோடா முதலியார் என்று அழைக்கப்படுகிறார்கள் இவர்களுடன் மற்ற பகுதியில் வாழும் செங்குந்தர் கைக்கோள முதலியார் களிடம் பெண் கொடுத்தால் வாங்கல் இல்லை.

ஒட்டக்கூத்தர் பற்றிய நூல்கள்
புலவர் பேரரசர் ஒட்டக்கூத்தர்: புலவர் பி.மா.சோமசுந்தரம், சேக்கிழார் பதிப்பகம், 1987. பக்.1-149
நான் கண்ட ஒட்டக்கூத்தர்: சிறீநிவாச ரங்கசுவாமி, நாம் தமிழர் பதிப்பகம், 2004, ப்க்.1-90.
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்: டாக்டர் சி. சுப்ரமணியன்

சரஸ்வதி கோயில்
கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் ஒட்டக்கூத்தர் வழிபட்டு கட்டிய அம்பாள் அருள் பெற்றுள்ளார்.

ஒட்டக்கூத்தரின் சிலை

தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரத்தில் அமைந்துள்ள ஒட்டக்கூத்தர் ஜீவசமாதி

திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் அமைந்துள்ள சரஸ்வதி கோவிலில் உள்ள ஒட்டக்கூத்தர் சிலை


டாக்டர் சி. சுப்ரமணியன் ஒட்டக்கூத்தர் பற்றி எழுதிய புத்தகம்




ஒட்ட கூத்தரின் பேரன் ஒவ்வாத கூத்தனின் கல்வெட்டு

ஒட்டக்கூத்தரின் கொள்ளு பேரன் கல்வெட்டு


Post a Comment

0Comments
Post a Comment (0)