சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் உலக அளவில் புகழடைந்துள்ளார் நமது செங்குந்த கைக்கோளர் இன தமிழ்ப் பெண் இளவேனில் வாலறிவன்.
அவர் பெற்ற பதக்கத்துக்காக மட்டுமல்லாது அவரது பெயருக்காகவும் தமிழர்கள் அவரைக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்ப் பெண் ஒருவர் சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் எட்டியுள்ள மிகப் பெரிய உயரம் இது. 2019 ஆகஸ்ட் மாத இறுதியில், பிரேசில் தலைநகர் ரியோடி ஜனிரோவில் சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு (ISSF) சார்பில் நடத்தப்பட்ட உலகத் ISSE ன் ன துப்பாக்கிச் சுடுதல் போட்டி யின் 10 மீட்டர் ஏர்ரைபிள் சீனியர் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கும் நம் குல மங்கை இளவேனில், மீண்டும் 2019 நவம்பர் மாதம் சீனாவில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று உலக தர வரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
உ லக தர வரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியதன் மூலம், டிசம்பர் மாதம் ஜெர்மனியில் மியூனிச் நகரில், சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு' (ISSF) சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் தங்க இலக்கு விருதையும் (Golden Target Award, 2019) பெற்று நம் குலத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். கடலூர் மாவட்டம் காராமணிக் குப்பத்தில் வசிப்பவர் உருத்திராபதி (84). ஓய்வு பெற்ற கால்நடை ய்வாளர். இவரது மனைவி கிருஷ்ணவேணி (74). இவர்களுக்கு வாலறிவன் என்கிற மகன் உள்ளார். வரின் மனைவி சரோஜா.
இவர்களுக்கு இறைவன் என்கின்ற மகனும், இளவேனில் என்கிற மகளும் உள்ளனர். தற்பொழுது இருபது வயதாகும் இளவேனில் வாலறிவன், தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் இவர் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருகின்றார். தமிழ்ப் பற்றாளரான தாத்தா உருத்திராபதி, தன்னுடைய பிள்ளைகள், பேரக்குழந்தைகள், உறவினர்களின் குழந்தைகள் ஆகியோருக்குத் திருக்குறளில் இடம்பெற்ற பெயர்களை வைப்பதைக் கடமையாகவும் பெருமிதமாகவும் காண்டுள்ளார். மகனுக்கு வாலறிவன் என்று பெயர் சூட்டியவர், பேரக் குழந்தைகளுக்கு இறைவன், இளவேனில் என்று பெயர் வைத்துள்ளார்.
இளவேனிலின் தந்தை வாலறிவன், அகமதாபாத்தில் உள்ள தனியார் வேதியியல் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கிறார். தாய் சரோஜா, தனியார் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிவருகிறார். பெற்றோர் இருவரும் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் பிள்ளை களின் விருப்பம் எதுவோ, அதைச் செய்யவே ஊக்குவித்துள்ளனர். மகன் இறைவன் ராணுவத்திலும் மகள் இளவேனில் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்கள். "அண்ணன் தான் துப்பாக்கிச் சுடுதலில் எனக்கு தூண்டுகோள். தமிழகத்தில் உள்ள அமராவதி ராணுவப் பள்ளியில்தான் அண்ணன் படித்தான். அங்கே அண்ணனுக்கு துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி அளிக்கப்பட்டது. துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிபெற்றதைப் பற்றி வீட்டுக்கு வரும் போதெல்லாம் அண்ணன் பெருமையாக என்னிடம் பேசுவான். எனக்குப் பொறாமையாக இருக்கும். ' உன்னுடைய துப்பாக்கி எதிரிகளைக் கொன்றுதான் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் ஆனால் நான் போட்டிகளில் பங்கேற்றுத் துப்பாக்கிச் சுடுதலில் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன்' என விளையாட்டாகச் சொல்வேன் என்கிறார் இளவேனில்.
தற்போது குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில், மூன்றாம் ஆண்டு இளங்கலை ஆங்கிலம் படித்துவரும் இளவேனில், எட்டாம் வகுப்பிலிருந்து துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி எடுத்துவருகிறார். பத்தாம் வகுப்புப் படித்தபோது நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட இளவேனில், வெண்கலப் பதக்கத்துடன் வீடு திரும்பியுள்ளார். 'நான் பெற்ற முதல் பதக்கம் வெண்கலம் தான் அந்தப் பதக்கம்தான் வாழ்நாள் எல்லாம் துப்பாக்கியைக் கையில் ஏந்த ஊக்கம் தந்தது. அதற்குப் பிறகு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கினேன்” என்று சொல்லும் இளவேனில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெற்றிபெற்ற திரு ககன் நாரங் அவர்கள், சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவ மனை வளாகத்தில் நடத்தும் 'Gun for Glory அகாடமியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்வி நேகா சௌகான் அவர்களின் நேரடி மேற்பார் வையில் பயிற்சி எடுத்து வருகிறார்.
2014-ம் ஆண்டிலிருந்து உலக, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வரும் இளவேனில், சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு நடத்திய இளையோர் மற்றும் மூத்தோர்களுக்கான போட்டிகளில் மட்டும் எட்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சர்வதேச அளவில் பத்து மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலக அளவில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
2018- ல் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற இளவேனில், அதில் தங்கம் வென்றார். ஜெர்மனில் உள்ள மியூனிக் நகரில் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேசப் போட்டி யில் பங்கேற்று நூலிழையில் தங்கப் பதக்கத்தை சக நாட்டு வீராங்கனை களிடம் தவற விட்ட இளவேனில், இம்முறை தன்னுடைய வெற்றியை இறுகப் பற்றிக் கொண்டார்.
பிரேசிலில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் இறுதி போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் இளவேனில், 20 வயதிலேயே சர்வதேச உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங் கனை என்று பெயர் பெற்றுள்ளார்.
மேலும் 2018 மற்றும் 2019 ஆண்டுகளில், உலக அளவில் பல் கலைக் கழகங்களுக்கு இடையிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெங்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், பயிலும் பல்கலைக் கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். துப்பாக்கிச் சுடுதல் தவிர்த்து, பரத நாட்டிய அரங்கேற்றம் செய்துள்ள இளவேனிலுக்கு, பேட்மிண்டன் விளையாடுதல், நீந்துதல் மற்றும் நீண்ட தூரப் பயணம் செய்வது பிடித்த பொழுதுபோக்குகள் ஆகும்.