செய்யாறு தேவராஜ் முதலியார் ex MLA

0


செங்குந்த கைக்கோளர் குல செய்யார் எ. தேவராஜ் முதலியார் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991 ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகச் செய்யார் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இவர் மொத்த வாக்கு சதவீதமான 72.36% வாக்குகளில் 60.59% வாக்குகளைப் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை விட 35,955 வாக்குகள் அதிகம் பெற்றார். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது , செய்யாறு நகரத்திற்குச் சிப்காட் தொழிற்துறையைக் கொண்டு வரக்கோரி சட்டமன்றத்தில் பேசினார். மேலும் அதற்கான இடங்களை வாங்குவதற்கான ஒப்புதலையும் பெற்றார்.

இவர் சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே காலத்தில் அவர் சென்னை பல்கலைக் கழகத் துணை வேந்தராகவும் (பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.

இவர் 1991 ஆம் ஆண்டு சூலை 13 ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.





ஐயா சார்ந்த வேறு photo கள், ஐயாவின் குலதெய்வம் பற்றிய தகவல், Date of birth, Date of death போன்ற தகவல்கள் தெரிந்தால் 78269 80901 என்ற what's app எண்ணுக்கு அனுப்பவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)