நம் சமூகம் சார்ந்த செப்பேடுகள்

0
மயிலாடுதுறை செப்பேடு


செப்பேட்டின் காலம்: 16ஆம் நூற்றாண்டு, நரசிம்மர் ஆட்சிகாலம் (விஜயநகர பேரரசு)

இச்செப்பேடு எழுதியவர்: நாவினால் மழு எடுத்த ஞானப்பிரகாச சுவாமிகள்

செப்பேட்டில் உள்ள செய்தியின் சுருக்கமான விளக்கம:
செங்குந்தர் கைக்கோள முதலியார்  என்னும் போர் மற்றும் நெசவுத் தொழில் புரியும் சமுதாயத்தினர்  முருகப் பெருமானின் படைத்தளபதிகள் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வழி வந்தவர்கள் எனவும் முருகனைத் தங்கள் ஆண் குலக் கடவுளாகக் கொண்டு வழிபடுவர். அவர்கள் வாழும் அனைத்து ஊர்களிலும் முருகனுக்கு கோவில் கட்டி வழிப்படுவர். இச்செப்பேட்டில் திருச்சேய்ஞலூரைச் சேர்ந்த ஞானப்பிரகாச சுவாமிகள் கந்தபுராணத்தில் உள்ள செங்குந்த #கைக்கோளர் வரலாற்றினை  பிரசங்கித்து னாவினால் மழுவெடுத்து அரங்கேற்றி #நவவீரர் வம்சம் னிச்சியத்தார்“ என்றும் அதற்காக இவரை எட்டுக்கால் பீடத்தில் மீது இடங்கை பாவாடை விரித்து, இருபுறமும் விளக்கு வைத்து, பாதபூசை செய்து 1. தறிக்கு ஒருபணம் 2. தலைக்கட்டுக்கு ஒரு பணம் 3. நன்மைக்கு ஒரு பணம் 4. தீமைக்கு ஒரு பணம் 5. மூக்கூத்திக்கு ஒரு பணம் என  72 செங்குந்தர் நாட்டுக் கைக்கோளரும் தருவதெனத் தீர்மானித்து மரியாதை செய்தனர். மேலும் இவர் செங்குந்தர் கைக்கோள முதலியார் உள்ள எந்த இடத்திற்கும் சென்றாலும் இவரைப் பாவாடை (துணி) விரித்து வரவேற்று உபசாரம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தனர். இந்தத் தீர்மானங்கள் காஞ்சிபுரம் ஏகாம்பர் குாயிலில் முகவாயில் எழுந்தான் என்ற மண்டபத்தில் கூடி எடுக்கப்பட்டு “சமயச் செப்பேடு“ என்ற பெயரில் செப்பேடாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.


செப்பேட்டின் நகல்:
  • உ கணபதி துணை சிவ மீறுபை சண்முகன் துணை
  • ஸொஸ்திஸ்ரீ மன்மகா மண்டலேசுவர முவராய க
  • ண்ட நரைசிங்கராயர் பிரதிராஜிய பரிபாலந
  • ம் பண்ணி யருளா நின்ற சாலீய வாகன சகாப்த்த
  • ம் காஎ கலியுகாப்த்தம் சசூகூா அம்சு யி
  • தின் மேல் செல்லா நின்ற விஜய ள பங்குனி
  • உஉ குருவாரம் அசுவதி ஷ்சுஷத்திரமும் சித்தயோகமும்
  • சுபகரணமும் கூடிய சுபதினத்தில் ஸ்ரீகாஞ்சிபுர
  • யேகாம்பரனாத சுவாமி சன்னிதியில் முகவாயி
  • லெழுந்தான் மண்டபத்தில் செங்குந்தர் மற்றுள்ளா
  • ருங் கொறைவற கூடியிருந்து திருச்சேஞ்ஞலூர்
  • சுத்த சைவாசாரியராாகிய னாவினால் மழுவெடுத்த
  • ஞானப்பிரகாச சுவாமியாரவர்களுக்கு உரித்தி
  • ர புத்திரர் ஆணுக்கேறாய்ப் பிறந்தோர் மெயிமீசை
  • யிருந்தோர் வீரர் பாணனென்றும் பொற்கோவில்
  • கைக்கோளரென்னுங் கொங்கெழுபத்து ரெண்டு னா
  • ட்டிலுள்ள செங்குந்தரானவரும் பண்ணிக் கொடுத்த
  • சமையச் செப்பேடு கந்தபுராணத்தில் கைக்கோ
  • ளர் வரலாற்றின் பெருமையை மிகுதியாயிப் பா
  • டி பிரசங்கித்து னாவினால் மழுவெடுத்து அரங்கே
  • ற்றி நவவீரர் வம்சம் னிச்சயித்த சுவாமிகளுக்கு ப
  • ரிசு கொடுத்துத் தீராதென்று யிரட்டை விளக்கு மிட
  • ங்கைப் பாவாடை யிட்டு யெண்கால் பீடத்தே
  • பாதார்ச்சனை பண்ணி சாயிபோகமாயி தரி
  • க்கொரு பணம் தலைக்கட்டுக்கொரு பணம் நன்
  • மைக்கொரு பணம் தீன்மைக்கொரு பணம்
  • மூக்குத்திக் கொரு பணம் யிந்த அஞ்சு பணமும் வரு
  • த்தனையாக யெந்த மண்டலத்திலுள்ள யெந்த
  • கைக்கோள துரைகளும் பாவாடை வரிசை யு
  • பசாரஞ் செய்யவும் யிந்த செப்பேடு தள்ளி ய
  • தாசினமும் ஆஷேபமுஞ் செய்ய கூடாது யிந்த
  • கட்டளை சந்திராதித்தயருள்ள வரைக்குந் தப்பா
  • து யிந்தக்கட்டளை தள்ளி யுதாசன யாசேஷப
  • ம் பண்ணின பேர்களுக்கு சிவசக்தி சண்முகன் பா
  • தத்தானை சிவசமயஞ் செங்குந்த நாட்டாராணைப்
  • படி மகா பாதகனகாயாவரவரதினரகங்களை
  • யடைவார்களென்றுஞ் சத்தியமாய் யெழுப
  • த்து ரெண்டு னாட்டிலுள்ள செங்குந்தரானவரு மேகா
  • ம்பரனாத சுவாமி சன்னிதானத்தில் னரைசிங்
  • க ராயர் முன்பாக ஞானபிப்பிரகாச சுவாமியார
  • வர்களுக்கு தாம்பூர சாசனம் பண்ணிக் கொடுத்தோ
  • மிதரக் கரியஞ்சாதியார் சோழமண்டலத்துள்
  • பூமி பாலகரும் வாதாவியைத் திறைகொண்ட
  • வன்னியரு மிவர்களறிய பொது கையொப்
  • பஞ் செங்குந்தம் உ கந்தவேள் துணை உ

தமிழாக தொல்லியல்_துறை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
➡️ (Click)
_____________________________________

#செங்குந்தர் #முதலியார் #கோசர் #சேவற்கொடிவம்சம் #புலிக்கொடிவம்சம் மரபுவழி கோவில்களில் #சூரசம்ஹாரம் செய்யும் வம்சம்
#கந்தப்பரம்பரை #சோழர்_படை
#தெரிந்த_கைக்கோளர்_படை
#செப்பேடு #கந்தன்
_____________________________________




அலைவாய்மலைச் செப்பேடு

கிடைத்த இடம்: நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் பழந்தின்னிப்பட்டிக் கிராமத்தில் அலைவாய்கிரி மலை என்ற பெயரில் சிறு குன்று ஒன்று உள்ளது. இம்மலைச்சாரலில் குகையீசுவரர் மடம் என்ற செங்குந்த முதலியார்களுக்குரிய ஒரு தொன்மையான மடம் உள்ளது. அந்த மடத்தில் இந்தப் பட்டயம் உள்ளது. ஏற்கனவே பதிப்பிக்கப்பெற்ற பட்டயம். மைய அரசு தொல்பொருள் அளவீட்டுத் துறைக் கல்வெட்டுப் பிரிவினர் படி எடுத்துள்ளனர்.

 செப்பேட்டின் காலம்: கிபி பதினான்காம் நூற்றாண்டு

செப்பேட்டின் சுருக்கமான விளக்கம்:
இப்பட்டயத்தில் செங்குந்த கைக்கோள முதலியார் குலத்தாருக்குரிய பெருமைகள்
புராணத்துடன் ஒட்டிக் கூறப்படுகின்றன. அவர்கள் வீரம், ஈகை, பக்தி
நேர்மை, தியாகம், சோழமன்னர் போன்றோருக்கு உதவிய தன்மைகள்
வல்லானை வென்றது போன்ற விவரங்கள் சுவையுடன் கவிதை நடையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கொங்கு 24 நாட்டுச் செங்குந்த கைக்கோள முதலியார்களும், மதுரைச் சமய முதலியார்களும் கம்பளிச் சண்டையாகக் காஞ்சிபுரம் போனபோது குகையீசுவர சுவாமியை வணங்கிச் சென்றதால் வெற்றி பெற்றனர் என்ற விபரம் கூறப்படுகிறது. வரிகளைக்
குகையீசருக்குத் இதனால் செங்குந்தர்கள் தருவதாகவும், தொழில், திருமண காலத்தில் கொடை கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டு செப்பேடு எழுதிக்கொடுத்தனர் மணவா ளப் பிள்ளையாருக்கும், ஏழை செங்குந்த கைக்கோளக்கு பணம் அளிப்போம் என்றும் கூறியுள்ளனர். பலர் சாட்சிக் கை யொப்பமிட் டுள்ளனர்.


செப்பேட்டின் நகல் (மூலம்)
உ ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை. அலகாமலை
குகையீஸ்வர சுவாமியார் கீழ்கரை ஏழுநாட்டுப் பட்டயம். மேல்கரை 24
உ ஸ்ரீமன் மகாமண்டலேசுபரர் அரியதள விபாடன் செங்குந்த பூவராய
கண்டன் மூவறாய கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்டநாடு
கொடாதான் பூர்வ தட்சின பச்சிம உத்திர சத்த சமுத்திராதிபதி பாண்டிய
மண்டலத் தாபனாசாரியன் எம்மண்டலமும் திறைகொண்டருளிய
ராசாதிராசன் ராஜபரமேசுபரன் ராஜமார்த்தாண்டன் ராஜகெம்பீரன்
ராஜப்பிரதாபன் ராஜாக்கள் தம்பிரான் ரணமுகவீர பத்திரன் அதரகுர
வீரவிக்கிரமாதித்தியன் கட்டாரிச்சாளுவன்
நவகண்ட சக்ரவர் த்தி

மலைகலங்கிலும் மனங்கலங்கா தவன ஒரு குடைக்கீழ் உலகமுழு-தாரண்டவன் ராஜகோலாகலன் ராஜகோ ளரி ராஜபுங்கவன் ராஜசங்காரன் திருநய்பிறதிஷ்டாசாரியன் துட்டநிக்கிரக சிஷ்டபரிபாலன் அசுவபதி மிண்டரில்மிண்டன் மிண்டர் கொருகண்டன் வண்டராவுத்தன் உத்தண்ட கெஜபதி நவகோடி கண்டர்கண்டன் நாராயணன் தண்டராமன் உத்தண்ட மண்டலீகர்கண்டன் உபயகுல சுத்தாங்கதரன்க மனைமகுட மாலையிட்ட வீரவல்லயப் பிரதாபன் வீரகண்டப்பிறதாபன் வதாண்டமண்டலத்து சண்டபிறதாபன் சோழ மண்டலந் திறைகொண்ட தனைபுயாசலன் துலுக்கர் தள விபாடன் துலுக்கர் மோகந் தவிழ்த்தான ஓட்டியாதள விபாடன் ஒட்டியர்மோகந் தவிழ்த்தான் அண்டினவர் தஞ்சம் மிண்டினவர் மன்னிய மார்த்தாண்டன் மதியாத மன்னியபெருமாள் மதியாத மன்னிய கோளரி கலியுகரா மன் வரதுங்கபிரதாபன் தங்கப்பொன்மார்பன் மணிமகுட முடிகுடும் மனோபயங்கரன் ஈழமும் இலங்கையும் யாழ்ப்பானப்பட்டணமும் தொண்டமண்டலம் கொங்குமண்டலப் பிறதிட்டாச்சாரியன் அஷ்டலட்சமி பொருந்திய மார்பன் மன்னியர் கண்டன் துஷ்ட நிக்ரக சிஷ்டபரிபால அஸ்டபோாக புரந்தரன் துஷ்டர் கோஷ்டந் தவிழ்த்தான் பதினெட்டுக் கோட்டத் து மன்னியர் திறைகொண்டருளிய
வங்காளதேசமும் ராஜாதிராஜன்
கொண்டருளிய பாண்டிய மண்டலம்
கண்டன் நவரத்தின மாலிகா பரத்தான் சங்கீத சாயூச்சிய வித்யா வினோ தன் கெடிமன்னிய பூராயகண்டன் புண்டரீக புருஸோத்தம சகல சாம்பிராஜ்ய சண்டப்பிரசண்டன் சத்துருக்கள் மணவாளன் சமயகெம்பீரன் சமய
நாராயணண் சமயரோக கண்டன் அஷடைஸவரிய சம்பன்னன் சத்து சாகரமும் ஒரு குடைக்கீழ் ஆண்டு கொண்டருளிய ஸ்ரீகட்டாரிச் சாளுவன் ஸ்ரீவிருப்பாட்சிதேவ மகாராயர் வீரவசந்தராயர் போஜறாயர் வீரநரசிங்க மகாராயர் தன்மராயர் பூபதிராயர் கம்பராயர் அகளங்கதேவ மகாராயர் தெய்வராயர் கெசபதிராயர் கேசரிராயர் சதபாரயர் பிறவுடதேவ மகாராயர் சம்மட்டிராயா சூடும்புலித்தேவராயர் ஈசுரப்பாாயர் கம்பராயர் உச்சமல்லிதேவ மகாராயர் விசயராயர் தேவராயர் பவளேந்திர தேவராயர் ஈசுவரப்பனாயக்கம்பராயர் சதா சிவராயர் புஜபலதேவ மகாராயா ஸ்ரீரங்கராயன் மல்லிகார்ச்சுனராயா
ஸ்ரீவீரஹரிநாராயணன் மல்லிகார ச்சு னரா யா கிருஷணராயர் ராமராயர்
லட் சு மி வாசன் பூலோகநாயகன் பூமண்டலாதி சூர
கிருஷ்ணதேவ
மகாராயர்
வெங்கடபதிராயர்
அறிவுக்கு அகத்தீசன்போலவும் அழகுக்கு அனங்கனைப் போலவும்
வில்லுக்கு விசயனைப் போலவும் மல்லுக்குப் பீமனைப் போலவும்

வாளுக்கு அபிமனைப் போலவும் பொறைக்குத் தருமனைப் போலவும்
கொடைக்குக் காணனைப் போாலவும் நீதிக்குச் சோழனைப் போலவும்
புலியும் புல்வாயும் ஒரு துறையிலே நீர்குடித்து வாழவும் எலியும் பூனையும் கூடி வாழவும் கருடனும் பாம்பும் கூடி வாழவும் இந்தப்படி நீதிநெறியாக
ஒரு குடைக்கீழ் ராஜ்ய பரிபாலனம் செய்து அருளா நின்ற கலியுகசகாப்தம் 4624மேல் செல்லாநின்ற ஆனந்த வருஷம் வைய்யாசி மாதம் 5ந் தேதி
பூமடந்தை பணி கேட்ப ஒருமகுடந் தனிக்குடைக் கீழ் உலகனைத்தும்
காத்து கற்பகத்தையும் சுரபியையும் கார்முகிலையும் காத்தளித்து
நீதியினகண் நிலைநிறுத்தி நியாயத் தனமம் நெறிப்படுத்தி செங்கோலால்
வருகலியை மெலிவித் து சழுமணி முடிசூடி செங்கோல் வேந்தன்
செய்வகையறிந்து சிம்புள் தேவனே தெய்வமாகவும் பிணிதணியத் திசாதிசையனைத்தும் செவிடுபடாமல் மேகத்தைத் திறைக்
கொண்டு பூதத்தைப் பணிபுரந்த ராஜன் வீற்றிருப்ப கொமபும் சங்கும்
காளமும் குலதனமாகவும் மாற்றலரை அறநழித்து வந்தடைந்தார்க்கும் இனிதளித்து ஏற்றவர்க்கு மிருநிதியும் எண்டிசையும் எழில்பரப்பி வையத்துப் புகழ் நடத்தி மனம் பெரிதாய் அறம் வளர்ப்போர் ஆண்மையுந் சிலைவீரமும் சொல்வன்மையும் நல்லொழுக்கமும் தாண்டாண்மையம்
மிகப் பெருகிச் சர்வ சம்பத்து முடையவர்களாய் அறம்வளரப் நடத்தப்பட்ட சோழசக்ரவாத்திப் பெருமான் வல்லானைக் கொன்று படை வீடு கொண்டு தருபவருண்டோ வென்று கேட்டளவில் வல்லான் மாளிகையிலே சென்று
புகுந்து வகைதோறும் பத்துப் பேரைப் பலியிட்டுப் பிறஷ்தாபத்தொடுந்
தூங் கு ம் வல்லானைக் கொல்லாது விட்ட சிவன்மைந்தர். திருமேனி
காமாட் சி வரபுத்திரர். கந்தன் சகோதரர், வீரநாராயணர்
வீரவல்லானை வென்ற பஞ்சவர்ண தீட்சிதராகிய அபிமான பூஷணர்கள்
சாகச் சோம்பாதார். தன்பல மீட்டவர். நின்றவற்கு வாணாழ் கொடுத்தார்
மோவாய் எழுந்தார், ஆணாய்ப் பிறந்தார். கேளாய்ப் பிறந்தார். சோழன் அங்கம் காக்க நில்லா உயிர் கொடுத்து நிற்கும் புகழ் கொண்டோர். சென்னி மனமொத்த கைக்கோளர், நம்பெருமாள் திருமக்கள். சோழனுக்கு வச்சிரம்
அளித்தோர். சொன்னநாயம் தப்பாதோர், துஷடகண்டர், துஷ்டராதித்த துஷ்டபயங்கரர், துஷ்ட நிட்டூரர், கொடுமையிலங்கேசர், மீசை பரித்து
நாலு வர் ணா சிரமங்களும் காவலர் கட்டினோர் செங்குந்தர்க் புனைந்தோர்கள், கொளைச்சதையில்லாதோர், தண்டுவார் மிண்டர் அகளங்க வல்லோன், சாகச்சறுக்காதார், சாகச்சோம்பாதார் சாகைக்காய் மதன் தம்பலந்தின்னத் தலையரிந்தோர் அறநடந்தோர், தாய்ப் பசுவை வாலுருவி விட்டோர். பலவாயுதத்தில்
வல்லோர், போரில்வீரர். போார்கொண்டோர். போர்க்களத்தானைகள்
699
வாளுக்கு அபிமனைப் போலவும் பொறைக்குத் தருமனைப் போலவும்
கொடைக்குக் காணனைப் போாலவும் நீதிக்குச் சோழனைப் போலவும்
புலியும் புல்வாயும் ஒரு துறையிலே நீர்குடித்து வாழவும் எலியும் பூனையும்
கூடி வாழவும் கருடனும் பாம்பும் கூடி வாழவும் இந்தப்படி நீதிநெறியாக
ஒரு குடைக்கீழ் ராஜ்ய பரிபாலனம் செய்து அருளா நின்ற கலியுகசகாப்தம்
462மேல் செல்லாநின்ற ஆனந்த வருஷம் வைய்யாசி மாதம் 5ந் தேதி
பூமடந்தை பணி கேட்ப ஒருமகுடந் தனிக்குடைக் கீழ் உலகனைத்தும்
காத்து கற்பகத்தையும் சுரபியையும் கார்முகிலையும் காத்தளித்து
நீதியினகண் நிலைநிறுத்தி நியாயத் தனமம் நெறிப்படுத்தி செங்கோலால்
வருகலியை மெலிவித் து சழுமணி முடிசூடி செங்கோல் வேந்தன்
செய்வகையறிந்து சிம்புள் தேவனே தெய்வமாகவும்
பிணிதணியத் திசாதிசையனைத்தும் செவிடுபடாமல் மேகத்தைத் திறைக்
கொண்டு பூதத்தைப் பணிபுரந்த ராஜன் வீற்றிருப்ப கொமபும் சங்கும்
காளமும் குலதனமாகவும் மாற்றலரை அறநழித்து வந்தடைந்தார்க்கும்
இனிதளித்து ஏற்றவர்க்கு மிருநிதியும் எண்டிசையும் எழில்பரப்பி
வையத்துப் புகழ் நடத்தி மனம் பெரிதாய் அறம் வளர்ப்போர் ஆண்மையுந்
சிலைவீரமும் சொல்வன்மையும் நல்லொழுக்கமும் தாண்டாண்மையம்
மிகப் பெருகிச் சர்வ சம்பத்து முடையவர்களாய் அறம்வளரப் நடத்தப்பட்ட சோழசக்ரவாத்திப் பெருமான் வல்லானைக் கொன்று படை வீடு கொண்டு தருபவருண்டோ வென்று கேட்டளவில் வல்லான் மாளிகையிலே சென்று
புகுந்து வகைதோறும் பத்துப் பேரைப் பலியிட்டுப் பிறஷ்தாபத்தொடுந்
தூங் கு ம் வல்லானைக் கொல்லாது விட்ட சிவன்மைந்தர். திருமேனி
காமாட் சி வரபுத்திரர். கந்தன் சகோதரர், வீரநாராயணர்
வீரவல்லானை வென்ற பஞ்சவர்ண தீட்சிதராகிய அபிமான பூஷணர்கள்
சாகச் சோம்பாதார். தன்பல மீட்டவர். நின்றவற்கு வாணாழ் கொடுத்தார்
மோவாய் எழுந்தார், ஆணாய்ப் பிறந்தார். கேளாய்ப் பிறந்தார். சோழன்
அங்கம் காக்க நில்லா உயிர் கொடுத்து நிற்கும் புகழ் கொண்டோர். சென்னி
மனமொத்த கைக்கோளர், நம்பெருமாள் திருமக்கள். சோழனுக்கு வச்சிரம்
அளித்தோர். சொன்னநாயம் தப்பாதோர், துஷடகண்டர், துஷ்டராதித்த
துஷ்டபயங்கரர், துஷ்ட நிட்டூரர், கொடுமையிலங்கேசர், மீசை பரித்து
நாலு வர்ணா சிரமங்களும் காவலர் கட்டினோர் செங்குந்தர்க் புனைந்தோர்கள், கொளைச்சதையில்லாதோர், தண்டுவார் மிண்டர் அகளங்க வல்லோன், சாகச்சறுக்காதார், சாகச்சோம்பாதார் சாகைக்காய்
மதன் தம்பலந்தின்னத் தலையரிந்தோர்
அறநடந்தோர், தாய்ப் பசுவை வாலுருவி விட்டோர். பலவாயுதத்தில்
வல்லோர், போரில்வீரர். போார்கொண்டோர். போர்க்களத்தானைகள்.


_____________________

வீரபாகுதேவர் சமயச் செப்பேடு

 செப்பேட்ன் காலம்: கிபி 14ஆம் நூற்றாண்டு
செப்பேடு உள்ள இடம்: இச்செப்பேடு புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில்
உள்ளது. 

செப்பேட்டின் சுருக்கமான விளக்கம்:
முருகப் பெருமானின் படைவீரர்களான நவவீரர்களில் முதல்வரான வீரபாகு தேவருக்குப் பூசைத் திருப்பணி நடைபெற பல்வேறு தொழில்புரிவோர் அளித்த தர்மத்தை இச்செப்பேடு விளக்கமாகக் கூறுகிறது. செப்போட்டின் முன்புறம் ஒன்றன்கீழ் ஒன்றாக ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேல் பகுதியின் மையத்தில் வீரபாகு
தேவர் நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் உள்ளார். கைகளில்
க த்தி கேடயம், வில், அம்பு உள்ளன.
மயிலும் காட்டப்பட்டுள்ளது வரிகளில் செய்தி அவருக்கு இருபுறங்களிலும்
காவடியும் பொறிக்கப்பட்டுள்ளன
அதற்குக் கீழே இரண்டு வரிசைகளில் நான்கு நான்கு பேர்களாக 8
பேர்கள் கத்தி, கேடயத்துடன் காணப்படுகிறார்கள். நான்கு, ஐந்தாவது வரிசையில் இசைக் கருவிகளும், ஆறாவது வரிசையில் மனிதத்தலை,
கலப்பையும், ஏழாவது வரிசையில் கொடி, கட்டுமரம், பணப்பை, செக்கு
ஆகியவை காட்டப்பட்டுள் ளன.
கருவிகளாக இருக்கலாம் இவை பல்வேறு தொழில்புரிவோரின்
வீரபாகு தேவர்க்குக் கொடுத்த கொடையாக இருப்பதால் செங்குந்த கைக்கோளர் வேண்டுகோள் படி கொண்டுள்ளனர் என்று தெரிகிறது
அனைவரும் மகமைவரி செலுத்த கொண்டுள்ளவர் என்று தெரிகிறது

செப்பேட்டின் நகல் (முலம்)
உஸ்வஸ்திஸ்ரீ சுகாப்தம் 1504 இதன்மேல் செல்லாநின்ற சித்திரபானு
வருஷம் பங்குனி மாதம் 15 தேதி திருவிடைக்கழி பழனி குமாரசுவாமியார் உடைய வீரவாகு தேவர்க்கு படைப்பத்து கச்சிராயரும், மழவராயம் சோழகனார் காலாக்கள் தோழனும், பலநாட்டுக் செங்குந்தர் கைக்கோள முதலியாரும் நகரத்தார் படையுள்ளார் சிப்பியர் மயில்கொடி மரக்காயர் இடங்கை உள்ளுபட்டாரும், சமையம் குடுத்தோம்.

தறிக்கு பணம் அரை, தான நிருபாகமாயி இருக்குற பேர்களுக்கு
பணம்½ பல தொழிலாய் இருக்குற கைக்கோளர்க்கு தலைக்கட்டுக்கு
பணம் தலைக்கட்டுக்கு ப¾ மனண்ட்பக் கொத்து நட்டுவனுக்கு பணம் னாகபாச கொத்துக்கு ப½ சேவுகத்துக்கு பணம் ¾ வில்லுகர்
ப¾ செக்குக்கு ப½ காவேரி நகரத்தர்ர் தலைக்கட்டுக்கு ப¾ சிப்பிய படையுள்ளார் மரக்காயர் தலைக்கட்டுக்கு ப¾ கண்ணப்ப கோத்திரம் பேரூர்க்கு ப2 சித்தூற்கு ப1

வீரவாகு தேவரை திருமேநி கொள்ளவும், பூசை திருப்பணி திருநாள் நடக்கவும் கட்டளையிட்டோம். இத் தர்மத்துக்கு வருஷ வர்த்தினையாக குடுத்துவரக் கடவாராகவும், இத்தன்மத்துக்கு யாரொருவர் அகிதம் பண்ணினால் கெங்கைக் கரையில் காராம்பசுவைக் கொண்ண பாவத்திலே போக கடவாராகவும் பிராமணரை கொண்ண தோஷத்திலே போககடவது இவர்கள் சொல்படிக்கு கந்தபுராண ஞானப்பிரகாசர் எழுத்து உ



____________________


சேவூர்த் தலைப்பலிச் செப்பேடு

செப்பேடு உள்ள இடம்: 
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் சேவூரில் முத்துக்குமாரசுவாமி கோயில் காணியா ளரான கொளப்பலூர் அருணாசல முதலியாரிடம் இ்ச் செப்பேடு உள்ளது.

செப்பேட்டின் சுருக்கமான விளக்கம்:
ஆம் ஆண்டு கச்சி அண்ணாமலை முதலியார் மகன் முத்துக் க்
குமாரநயினார் திருப்பரண் எஏறிக் கழுத்தலகு பாச்சிச் சிவலோகம் ஏகிய
செய்தியைக் கூறுகிறது. கல்வெட்டுகள் கூறும் இதனை நவக்ண்டம் என்று பண்டைய முதற்கண் செங்குந்த முதலியார்களின் பெருமைகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன
உள்ளிட்ட சமூகப் பெரியவர்கள் கூடிய கூட்டத்தில் தலைப்பலி செய்து
கொண்ட முத்துக்குமாரநயினார் தன் மகன் குப்பமுத்துவுக்கு ராஜாதிபதி
மண்டலாதிபதி மடாதிபதி என்று பட்டம் சூட்டினார். கொங்கு 24 நாட்டுச் சமயமுதலிப் பட்டக்காரர்கள்த செங்குந்தர்கள் மடாதிபதிக்குக் கொடுக்கவேண்டிய வரிகள் பல
கூறப்படுகின்றன.
கூறப்பட்டுள்ளது. முத்துக்குமாரநயினார் மீது பிள்ளைத்தமிழ் இலக்கியம்
பாடப்பட்டுள்ளது.


செப்பேட்டின் நகல் (மூலம்)
பூவுலகத்திலே கலியுக சகாப்தம் 4842ல் துந்துபி வருஷம் மார்கழி
மாசம் 3 தேதி கக்கிரவாரமும் திரிதிகை புணர்பூச நட்சத்திரத்தில் கச்சி
அண்ணாமலை முதலி மகன் முத்துக்கு மாரநயினார் திருப்பரணேரிக்
கழுத்தலகு பாச்சிச் சிவலோக மேகினார்
சொற்ஸ்ரீமன் மஹாமண்டலேஸ்வரன் அரிகர விபாடன் பாசைக்குத்
கண்டன் தப்புவராத கண்டன்
மூவராய கண்டநாடு கொண்டு
கொண்டநாடு கொடாதான் துலுக்கர்தள விபாடன் துலுக்கர்மோகந் தவிர்த்தோன் ஒட்டியர் துலுக்கரை ஓட்டி வென்றவன் அஷ்டகிரி மட்டும் அரசாளுமன்னன் கோஷ்டம் பதினெட்டும் கொண்ட கிருபாகரன் துஷ்டானுக்கிரகன் சிஷ்டபரிபாலன் தன்னுயிர் போல மன்னுயிர்க்கிரங்கும் மகாராஜன் அறிவுக்கு அகத்தியன் பொறுமைக்குப் பூமாதேவி குளிர்ச்சிக்குச் சந்திரன் நிதிக்குக் குபேரன் வில்லுக்கு விசையன்
சொல்லுக்குத் தருமன் மல்லுக்கு பீமன் கொடைக்கு கர்ணன் ராஜாதிராஜன்
ராஜபரமேஸ்வரன், ராஜமார்த்தாண்டன், ராஜகெம்பீரன், ராஜரணசூரன் தேசமைம்பத்தாறிலும் ஜெயங்கொண்டவராகிய விசையமாநகரில் ரத்தினச்
சிங்காசனத்திற்குக் காரணகர்த்தராகிய நரசிங்கராயர், வீரவசந்திரராயா விருப்பாச்சிராயர், பிரபுடதேவராயர், மகாதேவராயர், மல்லிகார்ச்சுனராயர் கிருஷ்ணராயர், அச்சுதராயர், சதாசிவராயர், வெங்கிடபதிராயர், சீரங்கராயர் ஆனை குந்திராயர்
மனுநீதி விபரமும் ஆறிலொரு கடமை கொண்டு ஒரு குடைக்குகீழ்
ராச்சிய பரிபாலனம் பண்ணியருளிய மகாராஜனவர் களின் காரியப்
பிரதானராகிய மைசூரில் சாமராசு உடையார், கொண்டி வீரராச உடையார்
தேவரா சுடையார
கொங்கு தேவராசுடையார் செங்கோல்
மகாராஜனவர்கள் செலுத்துகின்ற சாலிவாகனன் கலியுகம் 4842 ல் துந்துபி வருடம் கணுவாயிக்கிங்கீழ் வசிக்காநின்ற சீமை முகாசி ஆறுநாடு சேவூரில் ஸ்ரீ வெங்கராயனார் அரசில் குமார சோழியாண்டாக் கவுண்டர் நீதி செலுத்துகிற நாளில் தாராபுரம்
சுப்பிரமணிய மூர்த்திக்குத் துணைவராகிய 
வீரவாகு, 
வீரகேசரி,
வீரமயேந்திரன்,
வீரமார்த்தாண்டர், 
வீரராந்தகர், 
வீரதீரர் நவவீரராகிய சிவன்மைந்தர்
திருமேனி காவலர் என்ன விலங்கிலும் நா விலங்காதவர், பட்டமானம்
பழுதறக் காத்தவர், இட்ட பரணேரி யிறங்காதவர், வல்லானை வென்ற வாசி
வேளைக்காரர் கந்தனனுசரர், காமாட்சி வரபுத்திரர், பஞ்சாட்சரம் பஞ்சவர்ன விருது மஞ்சள் பாவாடையுடைவர், ருத்திராட்ச மாலிகாபரணர், அரிபூசை குருபூசை மயேஷ்வர பூசையுள் ளவர், லவண்டை மல்லாரி முதல் 32 வாத்தியம்
பெற்றவர், இரத்தப் பஞ்சவர்ணக்கு டை பகல்வத்தியுடையவர், அர்த்தனாரிக் குஞ்சமும் ஆயுதம் பெற்றலர், ஆவடி சேவடி திருவடிபெற்றவர், காஞ்சிபுரத்தில்
கருமாரி நிலை கொண்டவர், சற்சன சுத்த சிவாச்சாரியார் அசுரர்குல காலர்
செருமுனை கண்டு பின்னடையாதவர், சென்றதிசை முழுதும் வென்ற
தீர், செங்கை வடிவேலினர், சீர்பாதசேகரர், என்றும் மனுநீதி கெடாதவர்
செம்பியன் மனமெச்சும் செங்குந்த வீரர், தம்பியை மனமொத்த
சாதியையொழிப்பர், ஈரேழுலகத்திலும் வீராதிவீரர், துஷ்ட நிக்கிரகர் சிஷ்ட
பரிபாலனர் வீரமயேஸ்வரர்
வீரபுரந்தரர் வீரராக்கதர் பொய்த்தலைக்கு மெய்த்தலை
கொடுத்தவர் பாவா டை சந்திராகாந்திப்
பாவா டையும் பல்லோர் புகழ்ந்திடப் பட்டணங் காத்தவர், சோணாடு கார்த்த சுகுணதீர், வீணாள்
சிகண்டியுடையவர், வரம்பிலாவமரர் சிறைமீட்டவர், கடம்பமாலை
கமழுமார்பினர், மந்தாரமாலை வாகுடன் பூண்டவர், நமச்சிவாயன்
தேவியராகிய நவமாதர் ஈன்ற 100009 பதின்மரின்றுணைவர், கைலை
காவலர், கைலாயத்தில் பார்வதி பரமேஸ்வரர் ஆடையா பரணமும்
கைலாயங்கிரி மகமேரு மலையையும் பார்வதி தேவியார் தனது மகனாகிய
செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள்
கைக்கொள் ளுங்களென்று திருவாக்கருளித் தமது திருக்கரத்தால்
பெற்றவர், இரவி பரவிட இல்லசையாதவர், புரவலர் புகழும் போர்முகவீரர்,
வீரவாகு முதல் 100009 வீரரிடத்தில் ஒப்புவித்து இதுகளயெல்லாம்
திருநீறிடப்பெற்றது முதல் கைக்கோள முதலிமாரென்று திருநாமம்
பஞ்சாட்சரப் பரிபூரணர், வீரசிங்காசன மேவி வீற்றிருப்பவர்
ஒஓட்டக்கூத்தரின் ஒப்பிலாத் தமிழுக்குச் சிரசிங்காசன மீந்தவர்
வணங்கா முடியினர், சித்திரப் புலிக்கொடி சீராய்ப் பெற்றவர், வாசியும்
விருதும் வன்மையுமுடியத் தேச மதிக்கச் செத்துப் பிறந்தவர்
வாஞ்சையுடனே மகாதேவரைக் கண்டு காஞ்சிபுரத்திற் கருமாரி பாய்ந்தவா்,
தீர்,
கைத்தாளம் பிடுங்கினோர்
சென்ற நான்முகனைச் சிகையைப் பிடித்தவர், கண்டுவருங்காளிதன்
நாரணன்றனது நந்மருகர் என சீரனி தாரனி செப்பிடப் பெற்றவர்
மன்மதனிருந்த மந்திரபுரியை வினயமுடன் புகுந்து வெட்டியழித்தவர்
இறப்பதற்கென்றும் ஏங்காத
மான குருமொழியை மறவாத செங்குந்தர் கோத்திரம் நீடூழி காலம் வாதி
கருமாரி கண்ட கைக்கோள முதலிமாராகிய கந்தனருள் பெற்றவ்.
அகாங்கு 24 நாட்டுச் சமயமுதலி பட்டக்கார், நாட்டாண்மைக்காரி
உறவீன்முறையார், எழுகரை நாட்டுச் சமயமுதலி பட்டக்காரா்
நாட்டாண்மைக்காரர்
எல்லோருங் கூடி கலியுக சகாப்தம் 4842 ல் துந்துபி வருடம் மார்கழி மாசம்
நே தேதி குருவாரமும் புனர்பூச நச்செத்திரமும் சுபநாம யோகமுங் கூடிய
சு.தினத்தில் செம்பியன் கிழாநாட்டுச் சேர்ந்த சேவூர் ஆறு நாட்டில் கூடி
முத்துக்குமாரசாமியாரவர்கள் மஞ்சள் நீர் குடித்து வளர்த்தின மகன்
குப்பமுத்துமுதலிக்கு முத்துக்குமாரநயினாரவர்கள் தமது சிவபூசை
முஸ்தேதி யெல்லாம் ஒப்புவித்துக்கொடுத்து தமது மகனாக நாட்டிலே
சுத்தி வருகிறபடிக்கு நாடு கூட்டி குப்பமுத்துமுதலிக்கு ராஜாதிபதி
மண்டலாதிபதி மடாதிபதியென்று விளங்கிய வைராபதிப் பட்டமும்
கொடுத்து நாட்டிலே வரி நடந்து வருகிறபடிக்கு எழுதிக்கொடுத்த சாசனம்
நம்ம இடங்கையர், மேற்படி கம்பளத்தார
தேவபூசை நடக்கும்படிக்கு பேரூருக்கும் சித்தூருக்கும் உள்ளபடி வைராபதிவரி மக்கத்துக்கு 1¼ பணம் ஒரு பூட்டு நூலும் வந்த
ஆள்களுக்குப் பரிசாரகமும் இந்தப்படி சம்மதித்து கொங்கு 24 நாட்டார்களும் எழுகரை நாட்டார்களும் நம்ம இடங்கை வகைராக்களும்
கூடி முத்துக்குமார நயினார் முன்பாகத் தீர்த்து சந்திரசூரியருள்ளவரைக்கும் நடந்துவரும்படியாக சேவூர் திருக்கபாலீசுவரர் சன்னதியில் எழுதியது
ஏறுக்கு ¼, தூக்குக்கு ¼, பட்டரைக்கு ¼.
சந்திரசூரியருள்ளவரைக்கும்
வருவோமாகவும் இந்த தர்மத்தை
சகலரும் நடத்தி மேலே கண்ட சகலரும் நடத்தி பருவமாகும்
இந்த தர்மத்திற்கு யாதாமொருத்தர் விகாதம் பண்ணின பேர்கள்
காசிக்கெங்கையிலே
கோதாவரியிலே
கன்னியாகுமரியிலே
பாவநாசத்திலும் திருக்குற்றாலத்திலும் பிராமணரையும் யோகீசுபரரையும்
குருக்களையும் தாய் தந்தையரையும் காராம்பசுவையும் கொன்ற
தோஷத்துலே போகக்கடவார்கள். இந்தத் தர்மத்தைப் பரிபாலனம்
பண்ணின பேர்களுக்கு அஷ்ட ஐஸ்வரியமும் ஆயுராரோக்கியமும் சந்தான
சமுரத்தையும் தெய்வப் பிரசாதமும் குரு பிரசாதமும் ராஜப் பிரதாபமும்
மென்மேலுண்டாகத் தக்கதாக காமாட்சிதேவியும் சுப்பிரமண்ணியசாமியும்
முத்துக்குமாரசுவாமியும் கிருபைசெய்து ரட்சிப்பார். சுபம்.




செங்குந்தர் குல வடபலாயி பட்டயம்

கிடைத்த இடம்: கூனம்பட்டி மாணிக்கவாசகர் செங்குந்தர் குல குரு மடம்



காலம்: 16ஆம் நூற்ண்டு கிருஷ்ணராஜ்
இல் எழுதப்பட்ட ஓலைப்பட்டயம்.

செப்பேட்டின் சுருக்கமான செயதி:
கிருஷ்ணராஜ்உடையார் ஆட்சியில் கோயமுத்தூர் தலைவர் தொடடராச அய்யன அதிகாரம் செய்யும்போது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செங்குந்தர நட்டுக்கட்டின நயினார் என்பவர் சத்தியமங்கலத்திற்கு வந்து கம்பம் அவர் இடங்கையார் ஆனதால் வலங்கையார் பலவந்தமாக
நாட்டினார் அதனைப் பிடுங்கிப் போட்டார்கள்
சத்தியமங்கலம் அதிகாரி நஞ்சராசையன் அவர் கள் கம்பத்துடன் நட்டுக் கட்டியை விசயமங்கலத்திற்கு அனுப்பினார். விசயமங்கலத்திலும் கம்பம் நாட்டியபோது வலங்கையார் கம்பத்தை வெட்டினார்கள். அப்போது
சமயமுதலி. பட்டக்காரர், நாட்டாண்மைக்காரர் மற்றுமுள்ள செங்குந்த முதலிமார்களும் பின்னடைந்தார்கள். நட்டுக்கட் டீ ஒருவனாகவே எதிர்த்து
நின்றான் சமூக வித்துவான் நட்டுக் கட்டியைத் தனியாக விட்டு எல்லோாரும்
ஏன் போகிறீர்கள்" என்று கட்க, செலவுக்குப் பணம் இல்லை என்று அவா்கள் சொன்னார்கள்
கலியாண முதலி என்பலா செலவுக்குத் தானே பணம் அளிப்பதாகச் கூறி எல்லோரையும் விசயமங்கலத்திற்கு அழைத்துக்கொண்டு வந்தாம் உறவின்முறையாருக்கு (சமயமுதலி, பட்டக்காரர், நாட்டாண்மைக்காரர்
பிற செங்குந்த முதலிமார்) 25 பொன்னும், நட்டுக்கட்டிக்கு நாள். ஒன்றுக்கு 5 பொன்னும் ஆக நாளைக்கு 30 பொன் வீதம் 48 நாளைக்குத் செலவு செய்தார்
விசயமங்கலத்தில் வலங்கையாரால் வெட்டின கம்பத்தை ஈரோடு கொங்கலம்மன் கோயிலுக்கு கொண்டுவந்து அங்குள்ள புளியமரத்தில் கம்பத்தைக் கட்டி நட்டுக்கட்டி, கலியாண முதலி உள்ளிட்ட அனைவரும்
கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு படுத்திருந்தார்கள். கலியாண முதலி படுகாயம் அடைந்தார். பின் மரணமடைந்தார் இதைக்கண்ட அதிகாரி நஞ்சராசையனவர்கள் ஆதரவளித்தின் தைரியம் சொல்லி கம்பத்தை நாட்டி கூத்துப் பார்த்து, வேண்டிய மரியாதைகள் செய்து பட்டணப் பிரவேசம் செய்து வைத்தார்
கலியாண முதலி சாதியின் பொருட்டுப் பெரும் செலவு செய்து சா தத்தி இறந்தான் என்று அவர் மகள் வடமலாயிக்கு செங்குந்தா் எல்லோரும் சமூக மரியாதை செய்தனர்.


ஆண்டுதோறும் ஒரு சேலை, மக்கத்திற்குக் கால் பணம், இரண்டு நூல் திருமணத்திற்கு பெண், மாப்பிள் ளை வீட்டார் ஓவ்வொருவரும் ஒரு பணம், ஐந்து பரிசாரகம், ஊரழைப்பு, ஊர் அனுப்பு விடுதி முஸ்தேதி இந்தப்படி கொங்கு செங்குந்தர் 24 நாடும் நடக்கும்படி ஆணை பிறப்பித்தார்கள் வடமலாயிக்குச் 'செங்குந்த மாணிக்கி' என்று பெயர் அளித்துப் பட்டயமும் கொடுத்தார்கள்
விசயமங்கலத்தில் திப்பு சுல்தான் அலுவலர் அந்தியூர்க் கசசோ
திவான் கிரிமிரே சாயபு வலங்கை - இடங்கைத் தகராறைத் தீாக்கும்
பொருட்டுப் 'பூர்வம் தீர்ந்த பட்டயம் பெற்றுக்கொண்டு சென்றதாகக்
கூறப்படுகிறது. அது இந்தப் பட்டயமாகவே இருக்கலாம்


செப்பேட்டின் நகல் (முலம்)

ஹரி ஓம் நன்றாக குருவாழ்க குருவே துணை

வய்ய னீடுக மாமழை மன்னுக
மெய்வி ரும்பிய அன்பர் விளங்குக
சைய்வ நன்னெறி தான்தழைத் தோங்குக
தெய்வ வெண்டிரு நீறு சிறக்கவே உ

சிவமயம் உ

சொத்திஸ்ரீ மகாமண்டலிஈசுவரன் அரியதழ விபாடன், ஆரியமோகந்
தவிள் த தான். ஒட்டியதழ விபாடன் ஒட்டியர் மோகந் தவிழ்த்தான்
ஆறிலொன்று கடமை கொண்டு அருள் பெருகி அன்பு கூர்ந்து ஆதுர
சாலையும், அந்தணர் வேள்வியும் வேதவொலியும், விழாவறா வீதியும்
தபோதனர் மடங்களும், தர்ம சாலையும் மிப்படி முப்பத்திரண்டறம்
விழங்கிய மண்டலந் திரைகொண்டருழிய றாசாதிறாசன், றாசர் பரமே சுவரன்
றாசமனோ பயங்கரன், கடல்கலங்கிலுங் காவேரி வற்றிலும் மலை- அலுங்கிலும்
கொண்டனாடு குடாதான்
றாசமாற்தாண்டன், றாசகுலதீரன், றாசகெம்பீரன் மனங்கலங்காத
கண்டன் கன்டனாடு
கொண்டு சொல்லுக்கு அரிச்சந்திரன், அழகுக்கு அனங்கன், அறிவுக்கு
அகத்தியன், அசுவபதி கெசபதி நரபதி தநபதி மல்லிகாற்சுனறாயர் பிறபுடதேவராயர் மையிசூர் ரத்தின சிங்காசனத்துக்கு உடயவறாகிய மகாறாச ஸ்ரீ கிறஷணறாச உடையாற் அய்யநவர்கள் காரியத்துக்கு கற்தாவாகிய தழவாய வீரநஞ்சராச உடையாற் பிற்திஎ நாச்சியபாரஞ் செயிகின்ற னாழையில் ஆகிய அரிச
மல்லிகா சுடராய் சிறப்புடையது தேவராயர் மைசூர் ரத்தின சிங்காசனத்தில் உடையவராகிய மகாராசா ஸ்ரீ கிருஷ்ண ராஜ உடையார் அய்யன் அவர்கள் காரியத்துக்கு கர்த்தாவாகிய கால்வாய் நீரும் சாராய உடையார் திதி ஆற்றிய பணி செய்கின்ற னாளையில்



கோயமுத்தூற் குறித்தனம் பாருப்த்தியம் சகலாதிகாரமுஞ் செயிகின்ற தொட்ட றாசஅய்யநவாகள் றாச்சியபாரஞ் செயிகின்ற னா ளையில் வாகன கலியுக சகாபதம் 4655-க்கு மேல் செல்லாநின்ற ஆனந்த
வருஷம் வைய்யா சி மாதம் 23ந் தேதி பஞ்சமியும் ஸ்திரவாரமும் ப செத்திரமும் சுபனாம யோகமும் பெற்ற யிந்த சுப தினத்தில் காஞ்சிபுரம்
அட்டுக்கட்டியான நயினார் சத்தியமங்கலத்துக்கு வந்து கம்பனாட்டினான் வேலங்கையார் பிலவந்தமாய் பிடிங்கிப் போட்டார்கள், சத்தியமங்கலம் குறித்தனம் பாரபத்தியம், நஞ்சராசய்யனவர்கள்
இவர்கள் னாளையில் சத்தியமங்கலத்துக்குக் கட்டிய சனமும் கட்டுக்கட்டு னயினா ரைக் கம்பம் சயிதமரய் விசயமங்கலத்துக்கு அனுப்பிவித்தார்கள்.
வலங்கையார் கம்பத்தை வட்டினார்கள். அதின் பிறகு சமய முதலிப் பட்டக்காறர், நாட்டாண்மைக்காறர் மற்றுமுள்ள செங்குந்த முதலிமார் பின்னிட்டு போனார்கள்.
வித்துவானை தனியே விட்டுப் போட்டு கூடிய நாடெல்லாம் போகக்கா ரியமென்னவென்று
சித்தாயத்துக்கு யில்லாமல்ப் போறோமென்று சொன்னார்கள். முதலி ஆகிறவன் சிலவு சித்தாயத்துக்கு நானே, தருகிறேனென்று எல்லோரையும் விசையமங்கலத்துக்களைச்சுக் கொண்டு வந்தான்
வந்ததின் பிறகு கூடிய உறமுறைக்கு நாளொண்ணுக்கு இருபத்திஅஞ்சு
பொன் திருவேற்றினாகரம், நட்டுகட்டிக்கு நாளொண்ணு அஞ்சு பொன்
ஆக முப்பது பொன்னும் நாப்பத்தி எட்டு நாளைக்கும் சிலவு செய்தான்
விசையமங்கலத்துக் கம்பம் னாட்டினயிடத்தில்
நட்டுக்கட்டி ஒருத்தனாக நின்றான். சாதி
குறுக்காட்டிக் கேட்டவிடத்தில் சிலவு கலியாண விசைமங்கலத்திலே வெட்டின கம்பத்தை ஈரோட்டுக்குக் கொண்டு
போய் கொங்கிலாண்டம்மன் கோவில் புளிய மரத்திலே கம்பத்தைக் கட்டி
நட்டுக்கட்டியும் கலியாண முதலியும் இத்தண்டத்தாரும் கம்பத் தடியிலே
மூணுனாள் ஆறுபொழுது பிராணத்தை விட்டுவிடுகிறோமென்று
படுத்திருந்தார்கள்
நஞ்சராசய்யனவர்கள் கேட்டு இவர்களை அளைக்கவிட்டு இவுகள்
முன்னடந் த சேதி பாதிப்பெல்லாம் கேட்டு அப்படியே ஆகட்டும்
ஒண்ணுக்கும் யோசினை பண்ணாதேயளென்று தயிரியம் சொல்லி
மற்றாநாள் கம்பத்தையும் நாட்டிவிச்சு கூத்துப்பாத்து வேண்டியத்தக்க
உடுகிறையும் செய்து பட்டணப் பிறவேசம் பண்ணிவித்தார்கள்.
அப்போது இருபத்துனாலு னாட்டுக்கும் சமைய முதலிமார் பட்டக்காரர்
நாட்டாண்மைக்காரர் மற்றுமுள்ள செங்குந்த முதலிமார்கள் எல்லோரும்
கூடி கலியாண முதலிக்கு சாதிக்குச் சிலவளிவுஞ் செய்து சரீரங்
குத்திப்பட்டானென்று நாடு இருபத்தினாளுங்கூடி கலியாண முதலி மகள்
வடமலாயிக்கு பட்டைய மெளுதிக் குடுத்த விபரம்
இந்தச் சேதி
குறித்தனம் பாரபத்திய
நஞ்சராசய்யனவர்கள் கேட்டு இவர்களை அளைக்கவிட்டு இவகள்
முன்னடந்த சேதி பாதிப்பெல்லாம் கேட்டு அப்படியே அகட்டுக்
ஒண்ணுக்கும் யோசினை பண்ணாதேயளென்று தயிரியம் சொல்கல்
மற்றாநாள் கம்பத்தையும் நாட்டிவிச்சு கூத்துப்பாத்து வேண்டியத்தக்க
உடுகிறையும் செய்து பட்டணப் பிறவேசம் பண்ணிவித்தார்கள்.
அப்போது இருபத்துனாலு னாட்டுக்கும் சமைய முதலிமார் பட்டக்காரர்
நாட்டாண்மைக்காரர் மற்றுமுள்ள செங்குந்த முதலிமார்கள் எல்லோரும்
கூடி கலியாண முதலிக்கு சாதிக்குச் சிலவளிவுஞ் செய்து சரீரங்
குத்திப்பட்டானென்று நாடு இருபத்தினாளுங்கூடி கலியாண முதலி மக்
வடமலாயிக்கு பட்டைய மெளுதிக் குடுத்த விபரம்

வருஷம் பிறிதியில் நாடு ஒருவரிசை உடமையும் ஒரு சேலையும்
மக்கவரி வீட்டுக்கு கால்பணமும் ரண்டு பூட்டு நூலும் கலியாண
வரித்தினை பெண்ணு வீடு ஒரு பணம் மாப்பிள் ளை வீடு ஒரு பணம்
அஞ்சு பரிசாரகம்
இந்தப்படிக்கு நடந்து வாறபடிக்கு நாடு இருபத்தினாலும் கூடி கலியாண
முதலி மகள் வடமலாயிக்கு செங்குந்த மாணிக்கியென்று பேரும் குடுத்து
பட்டயமுங் குடுத்தோம். இந்தத் தர்மத்தை யாதாமொருத்தன் விகாதம்
பண்ணினான் கெங்கைக் கரையிலே காராம் பசுவைக் கொண்ண
தோஷத்திலே போவான். இந்தத் தர்மத்தை யாதாமொருத்தன் பரிபாலனம்
பண்ணி வந்தவர்கள் கறக்கும் பாலுக்கும் பிறக்கும் பிள்ளைக்கு புத்திர
பவுத்திரர் உள்ளவரைக்கும் காசி ராமேசுரத்தில் விஷ்ட்ணு பிறதிட்டை சிவ
பிறதிட்டை பண்ணின பலனை அனுபவிப்பார்கள்
ஊரளைப்பு ஊர் அனுப்பு விடுதி முஸ்த்தேதி


செங்குந்தர் வெற்றிப் பட்டயம்
செப்ப்பேடு உள்ள இடம்: ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியகத்தில் இந்த பட்டயம் உள்ளது.

செப்ப்பேட்டின் சுறும்கமான விளக்கம்:
கொங்கு நாட்டு விசயமங்கலப் பகுதியில் 18ஆம் நூற்றாண்டின் 
இறுதியில் மக்கள் வந்துள்ளனர். செங்குந்த முதலியார், படையாட்சிக் கவுண்டர், ஆசாரிகள்

ஆகிய பஞ்சகம்மாளர், நகரத்தார், பள்ளர், மாதாரிகள் ஆகியோார் இடங்கைச் சாதியாகவும், கவரைச் செட்டிகள், தேவாங்கர், சாணார் ஆகியோர் வலங்கைச் சாதியாகவும் தம்மை அழைத்துக் கொண்டனா இடங்கை வலங்கைப் பிரிவுகளாக இயங்கி விசயமங்கலம் மாரியம்மன் திருவிழா வில் இடங்கைக்குரிய சில/சிறப்புக்களை வலங்கையார் அணிந்து கொண்டர். ஆடசேபம் தெரிவிக்க ஒரு வருடம் இந்தத் தகராறு நீடித்தது. அங்கு வந்த அசரத் திப்பு சுல்தானின் அந்தியூர் திவான் கிரிமிரே சாயபு பாட்சாவிடம் முறையிட அவர் 'பூர்வம் தீர் ந் த பட்டயங்கள்' வாங்கிக் கொண்டு ஆதாரங்களுடன் அவர்களைத் திருப்பூருக்கு வரச்சொன்னார் திருப்பூரில் விசாரித்த பின் வலங்கையார்க்கு இடங்கையார்க்குப் பூர்வீகம் முதல் என்னென்ன உரிமைகள் உண்டு என்று நிர்ணயம் செய்தார். வெற்றி பெற்ற இடங்கையார் வெற்றிக் காணிக்கையாக இடங்கையார் வழக்குத் தொடுத்த பொன் அபராதம் விதித்து வலங்கை தவறாக ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த விசாரணை 5.2.1797 இல் நடைபெற்றுள்ளது. திப்புவின் ஆட்சிக்காலத்தில் கொங்கு நாட்டுக் கிராமங்களில் அமுலுதார், சேனபாகம், சிரஸ்தார் ஆகிய மூன்று அதிகாரிகள் இருந்தனர் அமுலுதார் பெரும்பாலும் இசுலாமியராகவே இருந்தனர். மற்றவர் பெரும்பாலும் அந்தணராக இருந்தனர் விசயமங்கலம், அறச்சலூர், துடுப்பதி, ஊத்துக்குளி அதிகாரிகள் பெயர்கள் குறிக்கப் பெறுகின்றன திப்புவின் நிருவாகம் பற்றி அறிய இப்பட்டயம் மிகவும் உதவுகிறது. இடங்கையர்க்குச் செங்குந்தர் தலைமை தாங்கியதால் இந்த ஓலைப்பட்டயம் செங்குந்தர் வெற்றிப் பட்டயம் என அழைக்கப்படுகிறது. பல ஊர்க் கவுண்டர்கள் முன்னிலையில் இவ்வழக்கு தீர்க்கப்பட்டுள்ளது.


செப்பேட்டின் நகல் (மூலம்)
ஸ்ரீ சாலியவாகன சகார்த்தம் 1718 க்கு மேல் கலியுக சகார்த்தம் க்கு மேல் செல்லாநின்ற நழ வருஷம் தை மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அவிட்ட நட்சத்திரம் பரிநாம யோகமும் வால்வாகரணமும் யிப்படியாகக் கொற்ற சுபதினத்தில் ருமது றாசாதிராசன் றாசமாத்தாண்டன் றாசகெம்பீரன் பிரவுடறாய பிரதா பறாயர் நறபதிறாயர் நரசிங்கறாயர் தேவப்பறாயர் வுடையா வீரசமமந் தறாயர் சிக்கிந்ததேவருடையர் கிஷ்ட்டினறாயாவுடையர் இவர்கள் முதலான அநேக றாயர் பட்டங் காணங்கர் மயிகுூர்ச்சமஷ்ததானம் சாமறாயர்வுடையார் உடபைய காவேரி மத்திஷ்ஷமான சீரங்கப்பட்டணத்தில் ரற்றின சிம்மாசனருடராய் ருக்கும்போது பிருதுவிராச்சியம் பண்ணிக் கொண்டி யிவர்கள் காரியத்திற்குக் கருத்தராயிய நவாப்பு அசுரது அயிதாலிக்கான் சாயிவு அவர் கள் குமாரர் நவாப் அசறது டீப்புச் சுலுத்தான் பாச்சா சாய்பு அவர்கட்கு றாச்சியம் பரிபாலினம் பண்ணுகிறபோ துயிவாகள் காரியத்திற்கு முக்கிஷ்த்தராயிய அசூர் கச்சேரி மகாறாயர் றாயேஷ்த்திரி மீருசாயவு பாட்சா அவர்கள் விசாரணை பண்ணும்போது கொங்குமண்டலத்துக்குச் சேர்ந்த அந்தியூர்க்கச்சேரி ஸ்ரீ திவான் கிரிமிரே சாயிவு பாட்சா அவர்கள், சிரஷ்த்தார் றாமறாயர் அவர்கள் அமுதலிச்சாயிவு பாட்சா அவர்கள், கொங்கு மண்டலம் குறிப்பு நாட்டில் விசையாபுரத்துக்கு அமுலுதரர் மம்முதல்லி சாயிவு அவர்கள், சேனபாகன் அன்னயன் அவர்கள் சிரசதார் வெங்கிட்டயன் அவர் கள், அரச்சலூர் சுபா னுக்கான் சாயிபு அவர் கள் கிஷ்ட்டினய்யனவர்கள், சிரஷ்த்தார் கல்லய்யன் அவர் கள், துடுப்பதி அமுலு தார் மீராண்சாயிபு அவர்கள், சேனபாகச் சின்னப்பன் அவர்கள் சிரஷ்த்தார் வீரறாகுவய்யன் அவர்கள், ஊத்துக்குளி அமுலுதார் சாலிீ சாயிபு
அவர்கள், சிரஷ்த்தார் சேசகிரி அய்யர் அவர்கள், சேனபாக சுப்பய்யன் அமுலுதாரர் சேனபாக கோபால அவர்கள் குறிப்பு நாட்டுக் கவுண்டர்களில் அந்தியூர் காழியண கவுண்டன் அனுமந்த கவுண்டன், பொனனைய கவுண்டன், நெட்டரங்க கவுண்டன் துடுப்பதி வாரணவா சிக் கவுண்டன், அரசப்ப கவுண்டன், நாகய்ய கவுண்டன், பொன்னய கவுண்டன், ராமய கவுண்டன், சின்னத்தம்பிக் ராமய கவுண்டன், ஊ த்துக்கு ளி சற்பண சுவுண்டன் கவுண்டன் பெரியதம்பிக் கவுண்டன் முத்துக் கவுண்டன், செல்லப்ப கவுணடன் திருப்பூரு பொன்னய கவுண்டன், முதலிபாளையம் முத்துக் கவுண்டன் குன்னத்தூரு சீரங்க கவுண்டன், அறியூரு முத்துவேலப்ப கவுண்டன், ஆவுடையாக் கவுண்டன், கருப்ப கவுண்டன், திங் களூரு குள்ள கவுண்டன் மேற்படியார்கள் முதல் இருபத்துநாலு நாட்டுக் கவுண்டர்கள் முட்டத்து ராமகவுண்டன், செவியூறு ஈஸ்வரமூர்த்திக் கொண்ட மேற்படி ஆட்கள் முதல் 24 நாட்டு கவுண்டர்கள்
யிடங்கயிலாகிய இருபத்திநாலு நாட்டு
நாங்களெல்லா ருங்கூடி எழுதிக்கொடுத்த பூந் துறைநாடு
மபுரிநாடு முத்துக்காளியப்ப கவண்டர், காஞ்சி ஒடுபங்கநாு முதலபட்டக்கார கவுண்டர் அவர்கள், அருநாட்டு முதலி பட்டக்காப அவர்கள், பொன்குலுக்கி நாடு முதலி பட்டக்காரா அவர்கள்
பக்கநாடு சமையப்பட்டக்காரக் கவண்டரவர்கள், குரிப்பு நாகு
பட்டக்காரக் கவுண்டரவர்கள், காங்கயநாடு சமையப்பட்டக்காரக
சபையில் தேவண கவுண்டர் பட்டக்காரர் வேங்கல நாடு சமையம்பட்டக்காரக் கவுண்டரவாக ள்
ஒடுவங்கம் கவுண்டரவர்கள் தேன்கரைநாடு சமையப்பட்டக்காரக் கவுண்டரவாகள் கயைப்பட்டக்காரக் கவுண்டரவர்கள் அரையநாடு சமையம்பட்டக்கா கவுண்டரவர்கள்
எழுகரைநாடு சமயம்பட்டக்காரக் கவுண்டர், படையாச்சிக் கவுண்டன்
சின்னாயிக் கவுண்டன்
நாடு படையாச்சிக் கவுண்டன், கருப்ப
எவுண்டன், காஞ்சி ஒடுவங்கம் சமையம்பட்டக்காரர், பச்சைமுத்தாக
அண்டன், பூந்துறை நாடு பச்சா கவுண்டன், வடகரைநாடு படையாசசிக
கவுண்டன், திருமலை மணியகாரன், சத்திமங்கலம் ஒடுபங்கம் முத்துக
கவுண்டன், ஆசாரிகள் சின்னத் தட்டான், திருவேங்கிடக்கொல்லன்
கதித் தமலை ரங்க த் தச்சன் ஆனிமுத்து ஆசாரி, பொம்மத்தச்சன்
முத்துக்கொல்லன், நகரத்தான் தொப்பைசெட்டி, முத்தஞ்செட்டி, குள்ள
சேர்வைக்காரன் முத்துரங்கம், வெங்கிட்டநாயக்கன், பழ்ழர் வகையில்
வீரபத்திரப்பண்ணாடி
சோணப்பண்ணாடி, மாதாரி வகைகள் குப்பமாதாரி, ரங்கமாதாரி
சின்னமா தாரி இருபத்து நாலு நாட்டிலுள் ள யிடங்கையாருக்கு செங்குந்தமுதலிமார் படையாச்சிக்கவுண்டர் அவாகள் பஞ்சாள த்தார் பழ்ழர் மாதாரிகள்
யிடங்கையோருகளும் வெற்றிப்பட்டையம் கொடுத்த விவரம்
விசயமாநகரத்தில் மாரியம்மன் திருநாளிலே யிடங்கையாருக்கும்
வலங்கையாருக்கும் யித்தணடத்தாருக்கும் தண்டம் வந்து வலங்கைக் கவரைச் செட்டியாகிறவன் இடங்கையாருக்குள் ள சிகப்புக் க த் தியும் விருதும் நமக்குச் செல்லுமென்று சொல்லிக்கெண்டு யித்தண்டத்தாரும்
வழக்காடி ஆறு மாதம் ஒருவருசக காலமாய் யித்தண்டத்தாரும் சா தியும்
ட்டிக்கொண்டு வழக்காயிருந்த யிடத்தில் மகாறாயர் றாயஸ்த்திரி திவான் ரே சாயபு அவர்கள் சி மை விசாரணைக்கு விசயமங்கலத்திற்கு
குட்டிப்பண்ணாடிப்யிருளப்பப்பண்ணா டிப்மாதாரி யிவர்கள் முதலாகிய
வந்திருந்தயிடத்தில் வலங்கை
சேடச்செட்டி, தேவாங்கச்செட்டி, சாணார் முதலான வலங்கைச்சனமும்
தேசம் பெத்திசெட்டி தேட சிட்டி தேவாங்க செட்டியார் முதலான வலங்கை சனமும். யிடங்கைக்குச் சேர்ந்த முதலிமார், படையாச்சிக் கவுன்டரவர்கள்
ஆசாரியள் யித்தண்டத்தாரும் வந்து வழக்குச் சொன்னபடியினாலே
யித்தண்டத்தாரை பூருவந் தீர்ந்த பட்டையங்கள் வாங்கிக்கொண்டு
திருப்பூருக்கு வரச்சொல்லிப்போட்டுப் போனபடியினாலே அதே மேரைக்கு
யித்தண்டத்தாரும் திருப்பூருக்கு வந்து பட்டையங்கள் வாசித்துப்
பார்த்தயிடத்தில் யிடங்கையார் பட்டையத்தில் பூருவம் காஞ்சிபுரத்தில்
தீர்ந்த பிரகாரத்துக்கு கத்தியும் பஞ்சவர்ண விருதும் அத்தநாரிக் குஞ்சமும்
பகல்த் தீவட்டியும் பஞ்சவர்ண பாவாடையும் தெருமேல் மிரவணையும்
அன்னமேல் மிரவணையும் குதிரைமேல் மிரவணையும் பல்லக்கின்மேல்
மிரவணையும் செல்லுமென்று யிருந்தது
வலங்கை கவரைச்செட்டியள் கொண்டுவந்த பட்டையத்தில்
வெள்ளை வெண்சாமரம்
சனத்துக்குச்
செல்லுமென்று யிருந்தது. வலங்கைய்யர் கொண்டுவந்த பட்டையத்தில்
யிடங்கையார்க்குச் செல்லும் விருது பஞ்சவர்ண விருதும் பஞ்சவர்ணக்
கொண்டுவந்த
செட்டி
வாலிசெட்டி வீரிசெட்டி முதலான பலபட்டறையார் முன்பாகத் தீர்ந்து
கொண்டுவந்த பட்டையத்திலே
யிடங்கையாருக்குச் சகல விருதும் செல்லுமென்று யிருக்கிறபோது நீ
யிருக்கக்
காரணமென்னவென்று வலங்கைக் கவரைத் தேசம் பெத்திசெட்டியைப்
பிடித்து அங்கை செய்து விலங்குபோட்டு அரமணைக்கு ரண்டாயிரத்து
நானூறு பொன்னு அவுதாரம் வாங்கி வச்சார்கள். யிடங்கையார் கிட்ட
வெற்றிக்காணிக்கி ஆயிசத்தி அயினாறு ரூபா வாங்கி வச்சார்கள். வெற்றிப்
பட்டையமுங் குடுத்தார்கள். மிரவணையும் பண்ணி வச்சார்கள். இதெ
கொடுத்த
இதெ வெற்றிப்பட்டையமாக கட்டிக் கொள்ளவும்
வலங்கை சனத்துக்கு வெள்ளைக்கு டை
வெள்ளை வெட்டுப்
பாவாடையும்ன்வலங்கைச் பகல்த்தீவட்டியும் பட்டையத்தில் யிருந்தபடியாகவே பஞ்சாயத்தாரு கவரைச்செட் டி
வலங்கையான் யில்லாது குமார்க்கம் சண்டை பண்ணிக்கொண்டு
வெற்றிப்பட்டையமாக வெற்றிப்பட்டையம் அனைவரும்
எழுதிக் எழுதினவர் விசயாபுரிக்கெடியில சிரஷ்த்தார் வெங்கிட்டயன்
அவர்கள் எழுதினது. காமாச்சியமமன் துணை. அந்தியூர்க்கச்சேரி ராஜஸ்ரீ
திவான் கிரிமீரே சாயிபு அவர்கள், கச்சேரி சிரஷ்த்தார் இராமறாயர் அவர்கள்
அமுதல்லிக்கான் சாயிபு அவர்கள், விசயாபுரித் துக்கிடியில் அமலுதாரா
மம்முதல்லி சாயபு அவர்கள், சேனபாக அன்னய்யன் அவர்கள், சிரஷ்த்தார
வெங்கிட்டயன் அவர்கள், அரச்சலூரு அமுலுதார் ராயசம் சு பானுகான,
சா யபு அவர்கள், சிரஷ்த்தார் கல்லய்யன் அவர்கள், சேனபாகக.
கோபாலகிஷ்ட்டப்பயன் அவர்கள். துடுப்பூதி அமுலுதாரர் மீரான் சாயிபு
அவர்கள், சிரஷ்த்தார் வீரராகவய்யன் அவர்கள், சேனபாகச் சின்னப்பன
அவர்கள், ஊத்துக்குளி அமுலுதார் சாலீ சாயேபு அவர்கள், குரிப்பு நாட்டுக்
கவுண்டர்கள் அனுமந்த கவுண்டன், பொன்னைய கவுண்டன், அரசப்பக்
கவுண்டன், குப்பண கவுண்டன், பட்டக்காரக் கவுண்டன், நாகப்பக்
கவுண்டன், பொன்னைய கவுண்டன், றாமைய கவுண்டன், துடுப்பூதி
வாரணவாசிக் கவுண்டன், சின்னத்தம்பிக் கவுண்டன், ராமைய கவுண்டன் ஊத்துக்குளி சரபண கவுண்டன், பெரியதம்பிக் கவுண்டன், முத்துக்
கவுண்டன், செல்லைய கவுனண்டன், திருப்பூரு பொன்னைய கவுண்டன்
முதலிபாளையம் முத்துக் கவுண்டன், அந்தியூர் காளியண கவுண்டன்
குன்னத்தூரு சீரங்கக் கவுண்டன்
முத்துவேலப்பக் கவுண்டன், ஆவுடையாக்கவுண்டன், கருப்ப கவுண்டன் திங்களூரு குள்ள கவுண்டன், செவியூரு ஈஸ்வரமூர்த்திக் கவுண்டன்
ஆயசிம் கவுண்டன், ஆதியூரு
முத்துவேல் அப்பா கவுண்டர் 1600 கருப்புகவுனி திமுகவில் உள்ள கவுண்டரில் செவியூர் ஈஸ்வரமூர்த்தி கவுண்டன்.
நாங்களெல்லோருங் கூடி பிடங்கய் யாருக்கு வெற்றிப்பட்டையம்







மோரூர்க் காங்கேயர் ஏடு

காலம்: 15ஆம் நூற்றாண்டு
செப்பேட்டை எழுதியவர்: ராமசாமி பட்டன்
செப்பேட்டின் சுருக்கமான செயதி
மோரூரில் கொங்கு வேளாளரில் கண்ண குலத்தைச் சோரந்த காங்கேயர் என்பவர் வாழ்ந்து வந்தார், எழுகரை நாட்டுக்கு அவர் தலைவர் அவருக்குக் கன்னிவாடிக் காங்கேயர் என்றும் பெயர் உண்டு. அவருடன்
வாழ்ந்து வருபவர் 60 கரண காங்கேயன் என்னும் இடங்கை செங்குந்தா குலத்தைச் சேர்ந்த நல்லய்யன் மகன் நல்லய்யன் என்பவர். தமமுடைய தலைவராகிய காங்கேயருக்குப் பிள்ளையில்லை என்று
அந் தணரைக் கொண்டு நடை பெறும் வேள்வியில் சொங்குந்த குல நல்லய் யன்
முன்னிலையில் தன் தலையை இருதுண்டாக வெட்டிக் கொண்டான். அவன் வீரத்தைப் பாராட்டி அவன் வழியினர்க்குக் கன்னிவாடியில்
இருக்கும் இடங்கை உரிமைகள் யாவும் மோரூரிலும் வழங்கப்பட்டன மோரூர் நல்லபுள்ளியம்மன் கோயிலில் அம்மன் செங்குந்தர்கட்கு அர்த்தநாரீசு வரன் முன்னிலையில் நியாயம் பேசும் உரிமை வழங்கப்படுகிறது. அவர்கட்குக் கொடுக்கும் கொடைகள்
பற்றியும் இறுதியில விரிவாகக் கூறப்பட்டுள்ளது நல்ல இரா மசாமிப்பத்தர் நாடுபற்றிய செய்திகட்கு குறிப்புக்கள்
எழுகரை கொடுக்கப்பட்டுள்ளன செப்பேட்டை வெட்டியுள்ளார் என்பவர் செங்குந்த நல்லய்யன் தன் தலையை நிலையில் ஒரு சன்னதி மோரூர் கொங்கு வேளாளரில் கண்ணகுலக்கா ணிக்கோயில் நல்லபுள்ளியம்மன் கோயிலில் உள்ளது. செங்குந்த
முதலியார்கள் முத்துக்குமாரசுவாமி கோயில் என்று அழைக்கப்பெறுகிறது. அக்கோயிலே தன் தலையை வெட்டிக்கொண்ட நல்லய்யனின் பள்ளிப்படைக்
காயிலாகும். செங்குந்தர்கள் திருச்செங்கோட்டில் நல்லபுள்ளியம்மன் கோயில் ஒன்று கட்டியுள்ளனர். வெட்டிக்கொள்ளும் மட்டுமே அத்தெய்வத்தை வணங்குகின்றனர் தமிழ் ஆண்டு துந்துபி ஆவணி 25ஆம் தேதி திங்கட்கிழமை ழுதப்பட்டது என்று குறிப்பு உள்ளது.

இந்த நெல்லையன் வம்சத்தில் வந்தவர்களை இன்று செங்கோட்டுவேல் கோத்திரம் பங்காளிகள், தாடிக்கொம்பன் கோத்திரம் பங்காளிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.


செப்பேட்டன் நகல்(முலம்)
ஸ்ரீமத் நந்திகேசுபரசுவாமியார் அனுக்கிரகத்தாலே திருவாய் மொழிந்த
படிக்கு அநேகம் சதுர்யுகம் பூசை கொண்டருளிய தேவாதிதேவன்
தேவுத்தமன்
திருபொஷ்கரனி முக்கணீசுவரன் நின்றகோல மழகிய நிமலன் நேரமொரு
பஞ்சவர்ணப்
திராவிடதேசத்தில் தொண்டைமண்டலத்தில்
திருக்கம்பையாற்றில் பார்வதி தேவியம்மன் அர்த்தபாகம் பெறவேண்டி
அரியதபசு பண்ணுகையில் வாம்பாகம் பெத்தருளிய அம்மன் வீரபாகுவைப்
பார்த்து நீங்கள் ஆறுபேரும் தேவர் சேனையை மீட்டபடியினாலே
உங்களுக்கு
கொங்கனென்றும் பேருமிட்டு பட்டாபிஷேகம் சூட்டுகிறேனென்று
அம்மன் கட்டளையிட்டபடிக்கு கொங்குமண்டலத்திலே தெட்சின
கைலாசமாகிய அரவகிரியைச் சூழ்ந்த எழுகரை நாடெனும் காவேரி பவானி
திருமனிமுத்தாநதி அழகுமுரிச்சான் தொப்பை ஆம்பிராநதி நொய்யல் ஆக
சத்த நதியாகிய எழுகரை நாட்டிலுள்ள சிவசந்நதிகளும்
பக்திப்பிரியன் பத்தவத்சலன் பார்வதிமணாளன் பிரகாசன்
தெண்டாயுத அஸ்தன் செம்புத்தீவில் காஞ்சி மாநகரில் அரவகிரியைச் சூழ்ந்த எழுகரை நாட்டுக்கும்
பூந்துறைநாடு, பூவானிநாடு, வஞ்சிநாடு, சேலநாடு, இராசிபுரநாடு
பருத்திப்பள்ளிநாடு
மற்றுமுண்டான சிவசந்நிதிநாடு உறவின் முறையாரும் குடிபிரிதி சிட்ட
பரியா லனம் பன்னி அருளாநின்ற திருவுளம் வீரலட்சுமி விசயலட்சுமி
வாசரா கிய களம் வம்முசபரிபாலராகிய ஆதி கன்னிவாடி அறுபது
காங்கேயரோட அறுபது கரணகாங்கேயன் என்னும் இடங்கை பட்டமுத்து
நல்லய்யன் குமாரந் நல்லய்யன் மோரூருக்கானி துந்துபி வருஷம் ஆவணி
மாதம் இருபத்தைந்தாந்தியதி திங்கட்கிழமை சப்தமி திருவோண
நட்சத்திரத்தில் அறுபது காங்கேயனுக்கு பெகுநாளாய் பிள்ளையில்லாமல்
அறுபது கருண காங்கையனென்று வந்த நல்லய்யன் குமாரன் நல்லையன்
அறுபது காங்கையனுக்குப் பிள்ளை வரம் வேண்டி நல்ல புள்ளியம்மன்
சந்நதி முன்பாக பச்சைப் பார்ப்பான் னெரிவி செய்து வைராக்கியம் செய்து
தன் செரசினை இருதுண்டாக வெட்ட செயங்கொண்ட குமாரன்
நல்லய்யன் பேரிலே சந்தோசமாகி பின்பு அறுபது காங்கேயனுக்கு என்ன
வேண்டுமென்று
இடங்கைக்குட்பட்டது நடந்த மேரைக்கு வடக்கிலேயும் நடப்பிக்க
வேணும் தேவரீர்" என்று கேட்க
அப்படியே தருகிறோமென்கையில் கீழ்கரைப் பூந்துறை நாட்டில் அரவகிரியில் அறுபது கரண காங்கயரும் செங்குந்த கோத்திர உறவின்முறையாரும் இடங்கை முதலான உறவின் முறையாரும் ருத்ரோத்காரிவ ருஷம் புரட்டாசி மாதம் சனிக்கிழமை பதினைந்தாந் தியதி சனிக்கிழமை ஏழூர்நாடு வாழவந்திநாடு அரையநாடு கேட்க தேவரீர் நமக்குக் கன்னிவாடியில் நல்லய்யன் பேரிலே சந்தோசமாகி பின்பு அறுபது காங்கேயனுக்கு என்ன வேண்டுமென்று இடங்கைக்குட் பட்டது நடந்த மேரைக்கு வடக்கிலேயும் நடப்பிக்க வேணும் தேவரீர்" என்று கேட்க கேட்க தேவரீர் நமக்குக்
கன்னிவாடியில் அப்படியே தருகிறோமென்கையில் கீழ்கரைப் பூந்துறை நாட்டில் அரவகிரியில் அறுபது கரண காங்கயரும் செங்குந்த கோத்திர உறவின் முறையாரும் இடங்கை முதலான உறவின் முறையாரும் ருத்ரோத்காரி வருஷம் புரட்டாசி மாதம் சனிக்கிழமை பதினைந்தாந் தியதி சனிக்கிழமை

உத் தரநட்சத்திரம் இந்தச் சுபதினத்தில் கூடி
மாளிகைபிச்சம் முருகாவுடையார் சந்நிதி இந்திர விமானத்தேர் முன்பாக இருப்புமுக்காலி வைத்து ஆசாரஞ் செய்து பன்னிரண்டு சுமைபோட் அக்கினி எரியவிட்டு அதின்மேலே இருத்தி ஆண்டவர் காங் கய னை
அறுபது சிட்டந்தரித்து பட்டம் வைத்தும் குருக்கள்மார் ஆறுபேரும் கும்பாபிஷேகம் பண்ணி அட்சதை தாம்பூலம் குடுத்து கரண
இனிமேல் செங்குந்த கோத்திரத்திற்கு நடக்க வேண்டிய சாதி ஞாயம் அர்த்தபாகம் முன்பாக கட்டளை இட்டோம். சொன்ன விபரமாவதுவி சாரிக்கும் போது அடிக்கரை பணம் ஆறு வைத்து மேல் ஞாயம் பேசவும்

செங்குந்தர் குத்தத்துக்கு அவு தாரம் பணம் பண்ணிரண்டு வாங்கக் கட்டளையிட்டார் செங்குந்த சாதிகள் மக்கத்துக்கு வராகன் கால், தேவடியாளுக்கு மக்குத்திக்குப் பணம் மூன்று. கண்ணாளர் அரசுக்குச் சாதிக்குத லைக்கட்டுக்குப் பணம் ஒன்று வன்னியகுலத்தார் மேழிக்குப் பணம் ஒன்று, சிவப் பிராமணர் அரிசிப் படிச்செலவு விசாரிக்கும் விபரம். நகரத்துச் செட்டிக்குக் குடிப்பணம் ஒன்று. பகடை பட்டரைக்குப் பணம் இரண்டு இந்தப் பிரகாரம் கட்டளையிட்டு எழுகரை நாடும் கூடி செப்பேடு சாசனப் பட்டயம் எழுதிக் கொடுத்த பிரகாரம் சகலமான பேரும் தெரியப் பல்லக்கு மேலே வைத்து குதிரை தீவட்டி சூரியப்பாணு பதினெட்டு விருது கொடுத்து வீதி மெரவனை பண்ணிவைத்து மேள வாத்தியத்துடனே மண்டபத்திலே வச்சு இந்த அர்த்தபாகம் அறிய ஆறும் பன்னிரண்டும் உன்னுதென்று அனைவரும் திருவாக்குக் கொடுத்து அடிபணிந்தார்கள் அர்த்தபாகம் சந்திர சூரியர் நல்லபுள்ளியம்மன் பாதம் அறிய இதுக்கு ரொருவன் அனாத்தியம் பண்ணினவர்கள் வம்சமும் அழிஞ்சி போகும் காராளர் கானிக்கை ஏருக்கு கால் பொன்னும்
ஆ கெங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ன தோஷத்தில் போவானாக மாதா பிதாவைக் கொன்ன தோஷத்தில் போகக் கடவாராக. அரிபூசை சிவபூசை குருபூசை மகேசுவரபூசை தடுத்தவர்கள் போற நரகத்தில் போகக்கடவாராக போகக்கடவாராக யுகங்களுக்கும் இந்த பட்டயத்துக்கு இரண்டகம் பண்ணப் பட்டவர்கள் வம்சமும் போகக் கடவது ஸ்ரீவதை சிசுவதை பண்ணின தோஷத்தில் இனிமேல் வரப்பட்ட காலா காலங்களுக்கும் சிவமயம். அர்த்தபாகம் துணை. 

நல்லபுள்ளியம்மன் துணை சுப்ரமணியர் துணை கா மாட் சியம்மன் து ணை காரி விநாயகர் துணையிருந்து ரட்சிப்பார். அனைவர் சொல்படிக்கு எழுதிய எடப்பாடி ராமசாமிப் பத்தன் செய்தது.



அவிநாசித் திருப்பணிப் பட்டயம்
மைசூர் மன்னன் கண்டீரவரசன் காலத்தில் அமைச்சன் காரமுசாவுதீன்
கீழ் சேவூரில் இராமச்சந்திரன் அதிகாரம். செய்யும் காலத்தில் கொங்கு வேளாளரில் காடை குலப் பொன்னையன் மகன் தம்பணகவுண்டா
அவிநாசியிலும், திருமுருகன் பூண்டியிலும் நிர்வாகியாக இருந்தார்
அப்போது
சௌளவளம்பூண்டி மாரப்பன் ஆகியோர் அவிநாசிச் சிவாலயத்தில் முன்
கொடிக்கம்பத்தை நிறுவிய செய்தி பாடல் வடிவில் கூறப்பட்டுள்ளது
(1813) செங்குந்தர்களில் தேவணன் மாரப்பன
சுருள் வடிவத்தில் இந்தப் பட்டயம் உள்ளது


பேட்டியின் நகல் (மூலம்)
அவிநாசி லிங்கரும் பெருங்கருணையம்மனும் லட்சிக்கவும்

துகைபெற்ற கலியுகம் நாலா யிரத்துத்
            தொளாயிரம் ஈரேழுமேல்
            
தோன்றுசீ முகவருஷம் மிதுனநல் திங்களில்
துய்யமா வொன்பதனில்
சோதிபெறும் உயர்தசமி பாலவா கரணமும்
சுத்தசுப தினமதனில்

வகைபெற்ற மயிகுூர் சமஸ்தானத் துக்கரசர்
வாள்வீர கண்டீரவன்

மன்னுகூ னம்பட்டியில் துரைசமுகன் மேற்பாதன்
வந்தகார முசாவுதீன்

மனமகிழ் பதாவேவை யூர்ராமச் சந்திரன்
மன்னவன் சுபதினத்தில்

செகமெச்சு முருகபுரி அவிநாசி நிலையரசு
செயவன்ன காடைகோத்திரம்

தீரனென வளர்பொன்னயன் ராசனருள் தம்பணன்
செங்கோல் செலுத்துநாளில்

செங்குந்த குலதேவ ணன்சித்திர மாரப்பன்
செவளை தரு மாரப்பனும்

மகமொற்ற புக்கொளிப் பதியீசர் சன்னதி 
முன்வாய் துவசத்தம்பம்

வளருமுயர் கம்பமு நாட்டியே அவிநாசி நாதரையும் அர்ச்சித்தபின்

மலைமகள் பெருங்கருணை அம்மனிரு தாளையும்
வணங்கமிக வாழ்கவென்றே

சிவமயம்
காரமுசாவுதீன் அறிவேன்
சேவையூர் இராமச்சந்திரன் அறிவேன்
காடைகோத்திரம் தம்பணகவுண்டன் அறிவேன்
செங்குந்த கோத்திரம் தேவணன்முதலி அறிவேன்
மாரப்பமுதலி அறிவேன்
மாரப்பமுதலி அறிவேன்




காலிங்கராயர் அணைப்பட்டயம்
இப்பட்டயத்தின் முற்பகுதி அமரர் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் தொகுப்பிலும், பிற்பகுதி தமிழ்ப் பல்கலைக்கழக ஒலைச் சுவடித் துறையிலும் உள்ளது.

அணை மற்றும் வாய்க்கால் கட்டிய காலிங்கராயனுடைய பல்வேறு மக்கள் வரிகள் கொடுத்ததை இப்பட்டயத்தில் சுட்டிக் கூறப்படுகிறது. செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்த குடும்பங்கள் வருடத்திற்கு ஒரு பணம் வரி கொடுத்துவந்த செய்தி இடம்பெற்றுள்ளது.
இந்த செப்பேட்டில் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகம் பற்றிய வரிகள் ⬇️
"செங்குந்தை கோத்திரத்தில் கைக்கோளனார்
தேவாங்கு இவர்கள் மக்கத்துக்கு
வருஷத்திற்கு ஒரு பணமும் குடுத்து வரவும்"

Post a Comment

0Comments
Post a Comment (0)